பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான்

  • டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைப் பயன்படுத்தி பாஜக நாடாளுமன்றத்தில் தனது பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் மூலம் பல முக்கியமான மசோதாக்களையும் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ அரசு, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மிக முக்கியமான சில சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதில் சில மசோதாக்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் சூழலில், அதைப் பெறும் முயற்சியில் என்டிஏ இறங்கியுள்ளது.

    Advertisement

    மேற்கு வங்கம்

    இதில் முதன்மையானது மேற்கு வங்க அரசியல் சூழல், அங்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த 20 மக்களவை எம்பிக்கள் தனியாகப் பிரிந்து வந்து, பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறார்கள். திரிணாமுல் காங்கிரஸிற்கு மொத்தம் 29 எம்பிக்கள் உள்ளனர். சட்டப்படி ஒரு கட்சியை உடைக்க மூன்றில் இரண்டு பங்கு எம்பிக்கள் தேவை. அதாவது 20 எம்பிக்கள் இருந்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள். எனவே, இவர்கள் மீது தகுதி நீக்கம் பாயாது.

    Advertisement

    இந்த 20 எம்பிக்களும் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இவர்கள் ஆதரவு அளித்தால், மக்களவையில் என்டிஏவின் பலம் முதல்முறையாக 300-ஐத் தாண்டும்.

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததும், காங்கிரஸுடனான அதன் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது தேசிய அரசியலில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், திமுக தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. திமுகவிடம் உள்ள 22 மக்களவை எம்பிக்களின் ஆதரவு கிடைத்தால், அது பாஜகவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.

    Advertisement

    என்ன காரணம்!

    இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டுமானால், வெறுமன 51% பெரும்பான்மை போதாது. அவைக்கு வந்து வாக்களிப்பவர்களில் 3ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம். கடந்த ஏப்ரல் மாதம், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆகியவை இந்தப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் தோல்வியடைந்தன. அப்போது அரசுக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. எனவே, இந்த முறை எப்படியாவது அந்த இலக்கை எட்ட மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

    லோக்சபா

    மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் 3 இடங்கள் தற்போது காலியாக இருப்பதால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 540. 2/3 பெரும்பான்மைக்கு 360 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போதைய என்.டி.ஏ பலம் 293ஆக உள்ள நிலையில், திரிணாமுல் அதிருப்தி எம்பிக்களை சேர்த்தால் இது 313ஆக உயரும். மேலும், நிபந்தனை அடிப்படையிலான ஆதரவு என 22 திமுக எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தால் இந்த பலம் மொத்தம் 335ஆக உயரும்.

    Advertisement

    சிவசேனாவில் உள்ள உத்தவ் தாக்கரே அணியிலும் 9 எம்பிக்களில் 6 பேர் கட்சித் தாவ இருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் நடந்தால் மொத்த ஆதரவு 341 ஆகும். இத்தோடு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்பிக்களின் ஆதரவையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 348 வரை செல்லும். இலக்கான 360-ஐ எட்ட இன்னும் 12 எம்பிக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படும். சில எம்பிக்களை வைத்து அதையும் பெற முடியும் என பாஜக நம்புகிறது.

    நாடாளுமன்றம்

    மக்களவை மட்டுமின்றி, மாநிலங்களவையிலும் பாஜக தனது பலத்தை அதிகரித்து வருகிறது. மாநிலங்களவையில் 2/3 பெரும்பான்மைக்கு 164 இடங்கள் தேவை. தற்போது என்.டி.ஏ 150 இடங்களைக் கடந்துவிட்டது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் ராஜினாமா செய்துவிட்டு, பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்டு உள்ளே வரத் திட்டமிட்டுள்ளனர். திமுகவின் 8 மாநிலங்களவை எம்பிக்களின் ஆதரவும் கிடைத்தால், அங்கேயும் பாஜக எளிதாக மசோதாக்களை நிறைவேற்றிவிடும்.

    Advertisement

    இதைக் கணக்கில் கொண்டு ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ள மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை பாஜக கொண்டு வரவுள்ளது. குறிப்பாகத் தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் ஆகிய மசோதாக்களை பாஜக கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    English Summary

    NDA is attempting to secure a 360-seat two-thirds majority in the Lok Sabha by capitalizing on friction within TMC and DMK(நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் அதிகரிப்பு): BJP Strength in Parliament latest news in tamil.