மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் திடீர் ராஜினாமா.. உடனடியாக ஏற்ற ஜனாதிபதி.. பின்னணி என்ன?

  • டெல்லி: மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரவ்நீத் சிங்கின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் ஏற்பதாக ஜனாதிபதி திரெளபதி முர்மு அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் ரவ்நீத் சிங் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், ரவ்நீத் சிங் பதவி விலகி இருப்பது விவாதமாகி இருக்கிறது.

    Advertisement

    நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சிக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லியில் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் பரவி இருக்கிறது. மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திண்டாடி வருகிறது.

    Advertisement

    காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய கோரிக்கையாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். இதனால் நாளை பிற்பகல் வரை மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜூன் மாதம் 21ஆம் தேதியுடன் ரவ்நீத் சிங்கின் ராஜ்ய சபா எம்பி பதவிக்காலம் முடிவடைந்தது. அவருக்கு மீண்டும் ராஜ்ய சபா எம்பி பதவி அளிக்கப்படாத சூழலில், மத்திய இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

    Advertisement

    பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் ரவ்நீத் சிங்கின் ராஜினாமா ஜனாதிபதியால் உடனடியாக ஏற்கப்பட்டுள்ளது. ரவ்நீத் சிங்கின் ராஜினாமாவிற்கு பின்னணியில் அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தல் காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய அரசியலில் இருந்து விலகி, மாநில அரசுக்கு திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.

    பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீந்த் சிங்கின் மகனான ரவ்னீத் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, 2024ல் பாஜகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த போதும், அவர் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டதோடு, மத்திய அமைச்சரவையில் சேர்த்து கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    BJP: Union Minister Ravneet Singh Bittu Resigns, President Accepts Resignation on PM Modi Advice