தர்மேந்திர பிரதானை வைத்து.. காரியத்தை சாதித்த பாஜக! ராஜினாமாவுக்கு பின்னால் இருக்கும் பிளான்!

  • டெல்லி: மாணவர் போராட்டத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருக்கிறார். வெளியில் இருந்து பார்க்கும்போது.. மத்திய அரசு பணிந்துவிட்டதாக தெரியும். ஆனால், உண்மையில் தர்மேந்திர பிரதானை வைத்து பாஜக காரியத்தை சாதித்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    அதாவது மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடுமையாக அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அவைகள் முடங்கின. தொகுதி மறுவரை சட்ட மசோதாவை கொண்டு வரும் இந்த நேரத்தில் அவை முடங்குவதை பாஜக கொஞ்சம் கூட ரசிக்கவில்லை.

    Advertisement

    பாஜகவின் பிளான்

    தொகுதி மறுவரையறை மசோதா என்பது பாஜகவுக்கு ரொம்பவும் முக்கியமானது. இப்போது இருக்கும் நாடாளுமன்ற எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. அதிலும் குறிப்பாக உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே ஜெயிக்க முடியும். எனவே இந்த மசோதாவை எப்படியாவது அமலாக்கிவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

    விட்டுக்கொடுத்த பாஜக

    இப்படியான நேரத்தில் நாடாளுமன்றம் முடங்குவதை தவிர்க்க பிரதமரே நேரடியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், எதுவும் கை கொடுக்கவில்லை. எனவே, தர்மேந்திர பிரதானை இழந்தால்தான் மசோதாவை நிறைவேற்ற முடியும் என்கிற நிலை இருந்தது. ஆகவேதான் தர்மேந்திர பிரதானை விட்டுக்கொடுத்துள்ளது பாஜக.

    Advertisement

    பாஜக எதிர்பார்த்தது

    ராஜினாமாவுக்கு பிறகு பாஜக என்ன எதிர்பார்த்ததோ அதுவேதான் நடந்திருக்கிறது. அதாவது கரப்பான் ஜனதா கட்சி(சிஜேபி) தனது போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறது. அதேபோல சோனம் வாங்சுக்கும் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார். தமிழ்நாடு உட்பட.. நாடு முழுவதும் நடந்து வந்த போராட்டங்களும் முடிவுக்கு வந்திருக்கின்றன. எனவே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை இனி என்ன சொல்லிலும் முடக்க முடியாது. இதன் மூலம் தொகுதி மறுவரையறை மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று பாஜக கணக்கு போட்டிருக்கிறது.

    எதிர்க்கால திட்டம்

    முன்னதாக பாஜக ஆதரவாளர்கள், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய மாட்டார்.. அப்படி செய்தால், அடுத்தடுத்து அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். இது கடைசியில் பிரதமர் வரை வந்து நிற்கும் என்று பாஜக பயப்படும். எனவே, தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய சொல்லாது என்று கூறியிருந்தனர். ஆனால், எதிர்க்கால இலக்குகளை முன்னிறுத்திதான் பாஜக செயல்படுகிறது என்பதற்கு இந்த ராஜினாமா சிறந்த உதாரணம் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர்.

    English Summary

    BJP: Union Education Minister Dharmendra Pradhan has resigned following student protests. On the surface, it appears that the central government has yielded; however, political analysts suggest that the BJP has actually achieved its objective through Pradhan.