டெல்லி: பாஜக தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கௌரவ் பாட்டியாவுக்கு எதிராக, 'காக்ரோச் ஜனதா கட்சியின்(CJP)' நிர்வாகிகளால் சோஷியல் மீடியாக்களில் வெளியிடப்பட்ட சர்ச்சை பதிவுகள் தொடர்பான நீதிமன்ற வழக்கு கவனம் பெற்றிருக்கிறது.
தனக்கு எதிரான போஸ்டுக்கு ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு கௌரவ் பாட்டியா நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் கூறியிருக்கும் கருத்து இளைஞர்களிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
கடந்த 2025ம் ஆண்டில், கௌரவ் பாட்டியா தனது வீட்டில் இருந்தபடி ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் வீடியோ காலில் பங்கேற்றபோது, அவர் பேண்ட் அணியாமல் குர்தா மட்டும் அணிந்திருந்ததாக கூறி ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகியிருந்தது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, காக்ரோச் ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் கௌரவ் பாட்டியாவின் புகைப்படத்தை பயன்படுத்தி AI மூலம் ஒரு போலி பதிவை x பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர். அதில் கௌரவ் பாட்டியா கூறாத அவதூறு கருத்துகள் அவர் கூறியது போல சித்தரிக்கப்பட்டிருந்தன. இதுதான் பஞ்சாயத்து. இந்த விஷயம் தன்னை மனதளவில் காயப்படுத்தியதாகவும், எனவே தனக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாட்டியா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த படத்தை நீக்க அறிவுறுத்தியிருந்தது. நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதி துஷார் ராவ் கெடேலா முன்னிலையில், CJP நிர்வாகிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகிய இருவருமே கௌரவ் பாட்டியாவுக்கு எதிராக தாங்கள் ஷேர் செய்த அந்த அநாகரீகமான பதிவுகளை தாங்களாகவே முன்வந்து நீக்கிவிடுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, எதிர்காலத்தில் இதே போன்ற போலி அல்லது அவதூறு பதிவுகள் கௌரவ் பாட்டியாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் மீண்டும் பதிவிடப்பட்டால், அதுகுறித்து மெட்டா மற்றும் x நிறுவனங்களை கௌரவ் பாட்டியா நேரடியாக அணுகலாம் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதனை பரிசீலித்து அந்த நிறுவனங்கள் அத்தகைய பதிவுகளை நீக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. இந்த விசாரணையில் நீதிமன்றம் மிக முக்கியமான விஷயத்தை கூறியிருக்கிறது. அதாவது, "சோஷியல் மீடியாக்களில் இதுபோன்ற கேலி கிண்டல்கள் பொது வாழ்வில் சாதாரணமான ஒன்றுதான். நீதித்துறையே கூட இதை எதிர்கொள்கிறது" என்று நீதிபதி கூறியிருந்தார். இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேறு வழிகளை பயன்படுத்தலாம் என்றும், இந்த விவகாரத்தில் தற்போதைக்கு யாருடைய மீதும் தவறான எண்ணத்தை நீதிமன்றம் சுமத்த விரும்பவில்லை என்றும், அமைதி காக்குமாறும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இறுதியாக இந்த அவதூறு வழக்கில் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா மற்றும் CJP நிறுவனர் அபிஜித் தீப்கே ஆகியோருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி தங்களது விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இது குறித்து சௌரவ் தாஸ் தனது x பக்கத்தில், "வழக்கறிஞர் கௌரவ் பாட்டியா பேண்ட் அணியாமல் இருப்பது போன்ற போலி படத்தை நீக்குமாறு நீதிமன்றம் நேரடியாக உத்தரவிடவில்லை, மாறாக ஒரு ஆலோசனையாகவே முன்வைத்தது. நாங்கள் நீதிமன்ற வழக்குகளில் சிக்கி நேரத்தை வீணடிக்காமல், சமூகத்திற்கு பயனுள்ள நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்ற நீதிபதியின் அன்பான அறிவுரையை ஏற்றே இந்த படத்தை டெலிட் செய்ய ஒப்புக்கொண்டோம். இந்த வழக்கில், எங்களுக்கு எதிராக தீவிரமான தடை ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கௌரவ் பாட்டியா நீதிமன்றத்தில் கடுமையாக கோரியிருந்தார். ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் பாட்டியாவின் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்துவிட்டது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து வராமல், இரு தரப்பும் பேசி சுமுகமாக முடித்திருக்கலாம் என்று நீதிமன்றம் பாட்டியாவிடம் கூறியது. ஆனால், அவர் மறுத்துவிட்டார். நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கையும் மரியாதையும் இருக்கிறது. நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை நாங்கள் வீணடிக்காமல் மாட்டோம். எனவே எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று சௌரவ் தாஸ் கூறியிருக்கிறார்.என்ன பஞ்சாயத்து?
ரூ.2 கோடி இழப்பீடு
நீதிமன்ற உத்தரவு
இதெல்லாம் ஒரு மேட்டரா?
சௌரவ் தாஸ் விளக்கம்
பேசி தீர்த்திருக்கலாம்