பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய பிரிக்ஸ் மாநாடு! உலக தலைவர்கள் பலர் பங்கேற்பு!

  • டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் 18வது பிரிக்ஸ் மாநாடு தொடங்கியிருக்கிறது. இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, ஈரான் என 21 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றிருக்கின்றனர்.

    Advertisement

    இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் பங்கேற்றிருக்கிறார். இந்தியாவும், ஈரானும் ஒரே லைலின் வருவதை அமெரிக்காவால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடிாயது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த SCO மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்த டிரம்ப், "இந்தியா மற்றும் ரஷ்யாவை இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது" என்று கூறியிருந்தார்.

    Advertisement

    இப்படி இருக்கையில், இந்த பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் தீவிர எதிரியான ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படம் வெளியாகும். இது டிரம்புக்கு புதிய தலைவலியாக இருக்கும்.

    அமெரிக்காவின் இந்த அதிருப்திக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் பிரிக்ஸ் கரன்சிதான். அதாவது அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்துக்கொள்ள பொதுவான ஒரு கரன்சியை உருவாக்குவது. இப்படி ஒன்று உருவாக்கப்பட்டால், அமெரிக்காவுக்குள் பிரிக்ஸ் நாடுகள் பொருட்களை விற்பதை தடுக்கும் வகையில், அந்நாட்டின் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    Advertisement

    பிரிக்ஸ் நாடுகள் பொதுவான புதிய நாணயத்தை உருவாக்குவதை விட, தங்களின் சொந்த உள்நாட்டு நாணயங்கள் மூலமாகவே பரஸ்பர வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதலை எளிதாக்குவதில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றன. உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரங்களாக புதிய வளர்ந்து வரும் நாடுகள் மாறி வருவதாகவும், பழைய தலைமைகள் தங்கள் ஆதிக்கத்தை இழந்து வருவதாகவும் புதின் குறிப்பிட்டிருப்பது இந்த நேரத்தில் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. அதாவது இந்தியாதான் புதிய சக்தி என்று கூறுகிறார்.

    அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் இப்படி சொல்வது, இந்தியாவுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருக்கிறது. காரணம் அமெரிக்காவுடனும், ரஷ்யாவுடனும் இந்தியா வர்த்தகத்தை மெயின்டெயின் செய்கிறது. இந்த வர்த்தக பன்முகத்தன்மை காரணமாக முழுக்க முழுக்க ரஷ்யாவை மட்டும் சார்ந்து இல்லாமல், முழுக்க முழுக்க அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்காமல் இந்தியா தனி வழியை தேர்ந்தெடுத்திருக்கிறது. எனவே இன்று நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிலும் இந்தியாவின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    Topics: #brics #india #us

    English Summary

    BRICS Summit 2026: The BRICS summit begins in Delhi today, with leaders from 21 countries—including China, Russia, and Iran—participating. International political analysts observe that the United States finds India's friendly relations with Iranian leaders completely intolerable.