டெல்லி BRICS மாநாடு.. இந்தியாவுக்கு எந்த விதத்திலும் பலன் தராது! ப.சிதம்பரம் உடைக்கும் ரகசியம்

  • டெல்லி: செப்.12-13ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு நடக்கிறது. ஆனால், இந்த கூட்டமைப்பால் இந்தியாவுக்கு எந்த பலனும் கிடையாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். இவரது கருத்தக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

    Advertisement

    இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் நடக்கிறது. இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இப்படி இருக்கையில்தான் ப.சிதம்பரம் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

    Advertisement

    "இந்தியா பிரிக்ஸ், எஸ்சிஓ, ஜி20 மற்றும் குவாட் ஆகிய பல சர்வதேச கூட்டமைப்புகளில் அங்கமாக உள்ளது. ஆனால், இந்த அமைப்புகளால் நாட்டிற்கு என்ன உறுதியான பலன்கள் கிடைத்திருக்கின்றன? என எனக்கு தெரியவில்லை. கடந்த 2-3 பிரிக்ஸ் மாநாடுகளால் இந்தியாவுக்கு எந்த ஒரு குறிப்பிடத்தக்க நன்மைகளும் கிடைக்கவில்லை" என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    சிதம்பரம் இப்படி சொல்வதற்கு காரணங்கள் இருக்கின்றன. பொருளாதார நிபுணராக சிதம்பரம் இந்த விஷயத்தை பார்க்கிறார். பிரிக்ஸ் அல்லது எஸ்சிஓ கூட்டமைப்புகளில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கையில் இந்த கூட்டமைப்புகள் மூலம் இந்தியா மேற்கொள்ளும் வர்த்தகத்தில் இந்தியாவின் இறக்குமதி அதிகரித்து, ஏற்றுமதி குறைகிறது. இதனால் இந்தியாவுக்கு வர்த்தக பற்றாக்குறை மட்டுமே மிஞ்சுகிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    Advertisement

    மட்டுமல்லாது கடந்த கால மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெறும் ஒப்பந்தங்களாகவும், கூட்டு அறிக்கைகளாகவும் மட்டுமே இருக்கின்றனவே தவிர, அவை இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கோ பெரிய அளவில் உதவவில்லை என்றும் அவர் கூறுகிறார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், அமெரிக்கா தலைமையிலான குவாட் அமைப்பிலும் இந்தியா இருக்கிறது. அதே நேரம் சீனா, ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் பிரிக்ஸ், எஸ்சிஓ அமைப்பிலும் இந்தியா இருக்கிறது என்று ப.சிதம்பரம் சுட்டிக்காட்டிருக்கிறார் என்பதுதான்.

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ஏழரை சனி என்பது உலகம் அறிந்த விஷயம். அப்படி இருக்கும்போது நாம் இரண்டு நாடுகள் தலைமை வகிக்கும் வெவ்வேறு அமைப்புகளில் எப்படி இருப்பது? என்று கேள்வி எழுவது நியாயமானதுதான். இப்படி முரண்பட்ட அமைப்புகளில் பயணிப்பதால் இந்தியாவுக்கு எந்தவொரு குறிப்பிட்ட பக்கத்திலிருந்தும் உறுதியான நீண்டகால பாதுகாப்பு அல்லது, பலன் கிடைக்காது. அதற்கு பதில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் குழப்பம்தான் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

    Advertisement

    இதுபோக.. தற்போதைய பாஜக அரசு.. பிரம்மாண்டமான சர்வதேச மாநாடுகளை தங்களது அரசியல் விளம்பரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறது என்பதும் குற்றச்சாட்டாக இருக்கிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பம் உயர்வதாக காட்டப்படும் அதே வேளையில் நாட்டின் உண்மையான பொருளாதார பிரச்சனைகளான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாடம் மற்றும் எல்லை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ப.சிதம்பரமும் இதே பாயிண்ட்டைதான் முன் வைத்திருக்கிறார். ஆனால், வழக்கம்போல பாஜக இதை எதிர்க்கிறது.

    English Summary

    BRICS Summit 2026: The BRICS summit is taking place in Delhi on September 12–13. However, former Union Finance Minister and senior Congress leader P. Chidambaram has stated that India derives no benefit from this grouping. The BJP has strongly opposed his view.