இந்தியாவை அவமானப்படுத்திய ஜி ஜின்பிங்? கருப்பு உறையால் மூடிய காரில் டெல்லியில் பயணித்தது ஏன்? பின்னணி

  • டெல்லி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜி ஜின்பிங் பயணித்த காரின் மேற்பரப்பு கருப்பு நிற உறையால் மூடப்பட்டு இருந்தது. இது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    கடந்த 2019ம் ஆண்டு சென்னை அருகே மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை தந்தார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் இந்தியா வரவே இல்லை. இதற்கு கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதல் தான் முக்கிய காரணம்.

    Advertisement

    தற்போது இருநாடுகள் இடையேயான உறவு மெல்ல மெல்ல சீராகி வருகிறது. இதனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வந்துள்ளார். இந்தியா தலைமையேற்று டெல்லி பாரத் மண்டபத்தில் நடத்தும் 2 நாள் 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜி ஜின்பிங் இன்று டெல்லி வந்தார்.

    சீனாவில் இருந்து தனி விமானத்தில் ஜி ஜின்பிங் இன்று டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவரது உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது. பிறகு டெல்லி பாலம் விமான நிலையத்தில் இருந்து ஜி ஜின்பிங் தனது காரில் ஹோட்டலுக்கு சென்றார். இதற்காக கருப்பு நிற காரில் பயணித்தார். அந்த காரின் பெயர் Hongqi N701 என்பதாகும். இதுதான் ஜி ஜின்பிங்கின் பாதுகாப்பு வாகனமாகும்.

    Advertisement

    இந்த காரை சீனாவின்FAW-வின் Hongqi நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது. இந்த காரில் தான் ஜி ஜின்பிங் சீனா மட்டுமின்றி வெளிநாடுகளில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் டெல்லியில் தரையிறங்கிய ஜி ஜின்பிங் தனது Hongqi N701 காரில் விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு புறப்பட்டார்.

    அப்போது அவரது காரில் ஜன்னல் மற்றும் காரின் மேல்பகுதியை தவிர பிற பகுதிகள் அனைத்தும் கருப்பு நிற உறையால் மூடப்பட்டு இருந்தது. இது பலருக்கும் கேள்வியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஜி ஜின்பிங்கின் கார் எதற்காக ? கருப்புநிற கவரால் மூடப்பட்டுள்ளது? என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ டெல்லியில் காற்று மாசுபாடு உள்ளது. இதனால் தான் ஜி ஜின்பிங் தனது காரை பாதுகாக்க இப்படி செய்துள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    ஆனால் உண்மை என்னவென்றால் வேறு. பொதுவாகவே ஜி ஜின்பிங் தனது பாதுகாப்பு காரை வெளிநாடுகளில் பயன்படுத்தும்போது அதனை கருப்பு நிற உறையால் மூடி வைத்து செல்வதை பின்பற்றி வருகிறார். அதாவது ஜி ஜின்பிங் செல்லும் நாட்டுக்கு அவருக்கு முன்பாகவே அவரது கார் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கார்கள் சரக்கு விமானத்தில் தனித்தனியாக கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த சமயத்தில் கார்கள் தடித்த உறையால் மூடப்பட்டு சரக்கு விமானத்தில் ஏற்றப்படுகிறது. விமானத்தில் கார்கள் சேதமாகி விடுவதை தடுக்கவும், விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது கார்கள் சேதமடையாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்மூலம் அந்த கார்களின் மீது தூசி, கீறல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். இது பொதுவாக அனைத்து தலைவர்களின் கார்களுக்கும் பொருந்தும். ஆனால் பிற தலைவர்கள் வெளிநாடுகளில் தங்களின் கார்களின் பயணிக்கும்போது அதன் மீதான உறை, கவர்களை நீக்கிவிடுவார்கள்.

    Advertisement

    ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் அப்படி செய்வது இல்லை. தனது கார்களின் பாதுகாப்பு கருதி கருப்பு நிற உறையுடனே பயணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்தியாமட்டுமின்றி ஜி ஜின்பிங் மற்ற நாடுகளுக்கும் செல்லும்போதும் கருப்பு நிற கவரால் மூடப்பட்ட காரில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் மலேசியா சென்றபோதும் கருப்பு நிற கவரால் மூடப்பட்ட காரில் தான் ஜி ஜின்பிங் பயணித்தார். இதனால் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் உள்ளதால் ஜி ஜின்பிங் இப்படி பயணித்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.

    English Summary

    Chinese President Xi Jinping arrived in Delhi today for a two-day visit to participate in the BRICS summit. The roof of the car in which he traveled from the airport was covered with a black sheet. While many have been questioning the reason for this, key details regarding the matter have now emerged.