தமிழ்நாடு இருக்கட்டும்.. புதுச்சேரி, மே வங்கம், அசாம்.. 3 மாநிலங்களிலும் இன்று இடைத்தேர்தல்!

  • டெல்லி: தமிழ்நாட்டில் இன்று இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதேபோல மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரியிலும் இன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகிறது. மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் மற்றும் ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    Advertisement

    தமிழ்நாட்டில் இன்றைய தினம் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாதமாகவே தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. மக்கள் இன்றைய தினம் தங்கள் தீர்ப்பை அளிக்கவுள்ளனர். இந்த இடைத்தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் வெள்ளிக்கிழமை எண்ணப்பட உள்ளன. தமிழ்நாட்டை போலவே மற்ற மாநிலங்களிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    Advertisement

    மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகள்

    மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரேஜினகர் ஆகிய 2 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் முதல்வர் சுவேந்து அதிகாரி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதையடுத்து நந்திகிராம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாட்டில் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு

    தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் வென்ற மரகதம் குமாரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வென்ற இருந்த சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இந்த இரு தொகுதிகளும் காலியாகின.

    Advertisement

    புதுச்சேரியிலும் தேர்தல்

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். இரண்டிலும் அவர் வென்ற நிலையில், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அசாமில் லோக்சபா இடைத்தேர்தல்

    அசாமின் நாகான் மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆல் இந்தியா யுனைடெட் டெமோக்ரடிக் ஃப்ரண்ட் ஆகிய கட்சிகளுக்கு இடையே முக்கிய போட்டி நிலவுகிறது.

    Advertisement

    சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர், அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் வெள்ளிக்கிழமை எண்ணப்படும்.

    English Summary

    By-elections are being held today in six constituencies across Tamil Nadu, West Bengal, Puducherry and Assam(இன்று நடைபெறும் இடைத்தேர்தல்கள்): Bypolls Today latest news in tamil.