காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வரும் 17 ஆம் தேதி விசாரணை!

  • டெல்லி: காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 17 ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இடையீட்டு மனுவுடன் சேர்த்து ஆகஸ்ட் 17ல் விசாரிக்கப்படுகிறது.

    Advertisement

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளின்படி, தமிழ்நாட்டிற்கான உரிய நீரை கர்நாடக அரசு திறக்காததை அடுத்து, முதலமைச்சர் ஜோசப் விஜயின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    Advertisement

    இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வின் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தார். அதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 13 எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

    காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில், காவிரி படுகையின் நீரியல், வானிலை சூழல் ஆகியவற்றை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிற்கு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

    Advertisement

    நடப்பு ஆண்டில் போதுமான நீர்வரத்து இருந்த போதிலும், நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும், கர்நாடக அரசு மதிக்க தவறி விட்டது. ஏதேதோ காரணங்களைக் கூறி, முழுமையாக நீரை திறக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

    கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து, ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள், வினாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி, தண்ணீரை திறந்துவிட்டு, அது பிலிகுண்டுலு எல்லையை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

    கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவை, ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பிலிகுண்டுலுவில் நீர்வரத்து இருப்பதை உறுதி செய்ய, கர்நாடகாவிற்கு தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்." எனக் கோரப்பட்டது.

    Advertisement

    இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஜி.உமாபதி ஆகியோர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 10 ஆம் தேதி முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே தி.மு.க விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி மூத்த வக்கீல் பி.வில்சன் முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவுடன் சேர்த்து வருகிற 17 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    Advertisement

    இதற்கிடையே, கர்நாடகாவில் அதிக மழை பெய்த அணைகள் நிரம்பிய காரணத்தினால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இன்று கன்னட அமைப்புகள் சார்பில் பந்த் நடத்தப்படுகிறது.

    English Summary

    The petition filed by the Tamil Nadu government, seeking an order directing the Karnataka government to immediately release the water due to Tamil Nadu from the Cauvery, comes up for hearing in the Supreme Court today.