தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி என 15 நாட்களுக்கு நீர் திறக்கனும்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

  • டெல்லி: தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி நீர் வீதம் மொத்தம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Advertisement

    டெல்லியில் இன்று நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தினமும் 1 டிஎம்சி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டு என காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்து இருந்தது. கடந்த 3 மாதங்களில் 78 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா அரசு வழங்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், தற்போது 15 டிஎம்சி மட்டுமே கொடுக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து இருந்தது. 45 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

    Advertisement

    டெல்லி இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த ஆண்டு இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியும், அம்மாநில அரசு தண்ணீர் திறந்துவிட தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

    தமிழ்நாட்டிலும் மழை பெய்யாததால் விவசாயிகள் இழப்பை சந்திக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரப்படி அமைந்துள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மாதம் ஒருமுறை கூடி வருகிறது. அந்த வகையில் இந்த கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் திறந்துவிடப்படும் தண்ணீர் குறித்து விவாதிக்கப்பட்டது.

    Advertisement

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளும் இந்த அவசரக் கூட்டத்தில் பங்கேற்றனர். கர்நாடகா அரசு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 45.5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். ஆனால் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சேர்த்து மொத்தமாக கர்நாடகா அரசு 88 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும்.

    தற்போது வரை கடந்த 3 மாதங்களில் 10 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டிருக்கிறது. இதனால் நிலுவையில் உள்ள காவிரி தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அதிகாரிகள் வலியுறுத்தினர். 45 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி இருந்தது.

    Advertisement

    இந்த நிலையில் டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஒழுங்காற்றுக்குழு தமிழ்நாட்டிற்கு 15 டிஎம்சி தண்ணீர் திறக்க பரிந்துரைத்தது. நாளொன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் 78 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் இருக்கும் சூழலில், வெறும் 15 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறக்க பரிந்துரைத்தது. இந்நிலையில், தமிழகத்திற்கு தினமும் 1 டிஎம்சி நீர் வீதம் மொத்தம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English Summary

    Cauvery Water: Tamilnadu to Press CWMA for 78 TMC Release as Karnataka Opens Just 10 TMC in 3 Months