டெல்லி: கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நீங்கள் வீக்கா? கவலையே வேண்டாம், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிபிஎஸ்இ புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக சில மாணவர்களுக்கு கணக்கு என்றால் மிகவும் பிடித்தமான பாடமாக இருக்கும். இன்னும் சில மாணவர்களுக்கு கணக்கு என்றாலே அலர்ஜி! இந்த கணக்கு ஏன்தான் வருகிறது என்பார்கள். அதிலும் Trignometry, triangls, quadratic equations உள்ளிட்ட கணித பாடங்கள் மிகவும் கடினமாக கருதுவார்கள்.
பத்தாம் வகுப்பு வரை எப்படியாவது பாஸ் செய்துவிட்டு, 11 ஆம் வகுப்பில் கணிதமே இல்லாத பாடத்தை எடுத்து படிக்கவே விரும்புவார்கள். இதே போல் சமூக அறிவியல் பாடங்களில் அந்த காலகட்டத்தில் நடந்த போர்களின் வருடங்கள், முக்கிய புரட்சிகளின் ஆண்டுகள் உள்ளிட்டவைகளை நினைவில் வைத்துக் கொள்ள படாதபாடுபடுவார்கள். அறிவியல் பாடத்தை கேட்கவே வேண்டாம். இயற்பியலில் வரும் புதிய தியரிகளை புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கும், வேதியியலில் வேதியியல் சேர்க்கை குறித்து ஒன்றுமே புரியாது, தாவரவியலில் தாவரங்களுக்கான பெயர் வாயிலேயே நுழையாது! இத்தனை கஷ்டப்பட்டு 10ஆம் வகுப்பு தேர்வை எழுத வேண்டும். இந்த 3 பாடங்களில் ஒன்றில் தோல்வியடைந்தாலும் அந்த ஆண்டு முழுவதும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் வீணாகி போகும். இதனால் 2028-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிபிஎஸ்இ ஒரு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு 22 வகையான தொழிற்கல்வி திறன் பாடங்கள் (Skill subjects) அறிமுகப்படுத்தப்படும். அதில் பெறும் மதிப்பெண்களை வைத்தே கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் ஃபெயிலாகி இருந்தாலும் அதை பாஸானதாக மாற்றிக் கொள்ளலாம். எப்படி எப்படி எப்படி...னு கேட்கறீங்களா? எதுக்கு இத்தனை எப்படி? அதாவது ஒரு மாணவர் மேற்கண்ட 3 பாடங்களில் 33 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண்களை பெற்று தோல்வி அடைந்திருந்தாலும் அவர் தேர்வு செய்திருந்த திறன் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்தால், அந்த மதிப்பெண் ஃபெயிலான பாடத்திற்கு மாற்றாக கணக்கிடப்பட்டு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். இந்த சூப்பர் சான்ஸை பெற்று மேக்ஸ் குறித்து கிலி இல்லாமல் படிக்க வேண்டும் என்றால் 22 விதமான திறன் பாடங்களில் ஏதேனும் ஒன்றை விருப்பப்பாடமாக தேர்வு செய்திருக்க வேண்டும். அதாவது information technology, artificial intelligence, data science, retail, health care உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். இந்த பாஸ் மார்க் சலுகை, திறன் பாடத்தை எடுப்போருக்கு மட்டுமே பொருந்தும். மாணவர்கள் மொத்தம் 9 பாடங்களை படித்தாலும், பொதுத் தேர்வில் 2 மொழிப் பாடங்கள், கணிதம் , அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 முக்கிய பாடங்களுக்கு மட்டுமே கட்டாய பொதுத் தேர்வு எழுதினால் போதுமானது. 2026- 2027 ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் வரும் 2027- 2028 ஆம் ஆண்டு கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு செல்லும் போது இந்த புதிய நடைமுறையின் கீழ் தேர்வு எழுதலாம். இந்த 22 திறன் தேர்வுகள் மாணவர்களின் தனித் திறனை வளர்க்கும் நோக்கில் இருப்பதால் சிபிஎஸ்இயின் இந்த திட்டத்திற்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். அந்த 22 பாடங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். Retailஅறிவியல் கஷ்டம்
ஃபெயிலாகி இருந்தால்...
33 சதவீதம் மதிப்பெண்
22 திறன் பாடம்
பாஸ் மார்க் சலுகை
யாரெல்லாம் எழுதலாம்?
22 பாடங்கள் என்ன?
Information Technology
Security
Automotive
Introduction to Financial Markets
Introduction to Tourism
Beauty and Wellness
Agriculture
Food Production
Front Office Operations
Banking and Insurance
Marketing and Sales
Health Care
Apparel
Multi Media
Multi Skill Foundation Course
Artificial Intelligence
Physical Activity Trainer
Data Science
Electronics and Hardware
Foundation Skills for Sciences (Pharmaceutical and Biotechnology)
Design Thinking and Innovation