மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! மாநிலங்களுக்கு ₹90000 கோடி வட்டியே இல்லாமலா? தமிழகத்திற்கு என்ன பலன்

  • டெல்லி: மத்திய அரசு 90,000 கோடி ரூபாய் நிதியை மாநிலங்களுக்கு வட்டி இல்லாத கடனாக வழங்க முடிவு செய்துள்ளது.. இந்த நிதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே மாநில மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும்.. இதுகுறித்த தகவலை டெல்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

    Advertisement

    மூலதன செலவு கடன் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது..

    Advertisement

    இதில் கிட்டத்தட்ட 45 சதவீத தொகையை முதல் காலாண்டிலேயே விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.. இந்த நிதி மாநிலங்களில் உள்ள ரயில்வே, நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், குடிநீர் வழங்கல் மற்றும் மின் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.. இதனால் மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் வேகம் எடுக்கும்..

    மத்திய அரசு நிதி நிலவரம் - கடன் தொகை

    இப்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மேற்காசிய போர்ச்சூழலால் உள்நாட்டில் எந்தவொரு பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது.. உள்நாட்டில் பொருளாதார இயக்கத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    Advertisement

    கொரோனா பேரிடர் காலத்தில் தான் இந்த 'மாநில மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி திட்டம்' முதன்முதலில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.. அதன் பிறகு இந்த திட்டம் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டது.. கடந்த 2020 - 21 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக 12,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது..

    அதன்பிறகு அரசு திட்டங்களுக்கான முதலீட்டை அதிகரிப்பது மற்றும் சீர்திருத்தங்களை ஊக்கப்படுத்தும் வகையில் கடந்த 2024 - 25 மற்றும் 2025 - 26 நிதியாண்டுகளில் இத்திட்டத்தின் வரம்பு 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டது.. இதனால் தான் 2025 - 26 நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள 9,000க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்த நிதியை மாநிலங்கள் பயன்படுத்தின.

    Advertisement

    70,000 கோடி ரூபாய் நிதி

    இப்போது இதன் அடுத்த கட்ட நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது.. இதில் மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த நிதியின் பெரும் பகுதி, அதாவது 66 சதவீதம் கட்டுப்பாடற்ற செலவின ஒதுக்கீடாகவே மாநிலங்களுக்கு கிடைக்கப்போகிறது.. இதனால் மாநிலங்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களுக்கு சுதந்திரமாக நிதியை பயன்படுத்த முடியும்..

    நிதி நிலவரத்தை பார்த்தால் கடந்த 2025 - 26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 40,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருந்தது.. அதேபோல நடப்பு நிதியாண்டில் மத்திய அரசால் கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாத இறுதிக்குள் மேலும் 70,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

    Advertisement

    மத்திய அரசு நிதி விடுவிப்பு

    நிதி நிலவரத்தைப் பொறுத்தவரை, கடந்த 2025 - 26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 40,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருந்தது.. அதேபோல நடப்பு நிதியாண்டில் மத்திய அரசால் ஏற்கனவே கிட்டத்தட்ட 20,000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.. இதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாத இறுதிக்குள் மேலும் 70,000 கோடி ரூபாய் நிதி மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!

    English Summary

    Delhi’s Big Decision.. States Await Rs 90,000 Crore Interest-Free Loan.. What’s Behind It?