யானை பலம்.. ஆனாலும் இந்தியாவை வீழ்த்த முடியாது! சீனாவுக்கு இருக்கும் பெரிய சிக்கல்!

  • டெல்லி: சீனாவிடம் இன்றைய நிலவரப்படி 1,800க்கும் அதிகமான போர் விமானங்கள் இருக்கின்றன. குறிப்பாக மறைந்திருந்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 500க்கும் மேலான 'ஸ்டெல்த்' ரக போர் விமானங்கள் இருக்கின்றன. ஆனாலும், இந்தியாவை வீழ்த்த முடியாது.

    Advertisement

    ஏன் இந்தியாவை வீழ்த்த முடியாது? என்பது குறித்து 'யுரேஷியன் டைம்ஸ்' விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில் ஏர் சீஃப் மார்ஷல் சிங்கின் கூற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் பலம், பலவீனங்களை விளக்கியிருக்கிறது.

    Advertisement

    சீனாவின் பலவீனங்கள்

    முதல் விஷயம், உயரமான விமான தளங்கள்தான். அதாவது சீனாவின் பெரும்பாலான முக்கிய விமானப்படை தளங்கள் திபெத் பீடபூமியில், கடல் மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில்.. சுமார் 3,700 முதல் 4,300 மீ உயரத்தில் அமைந்துள்ளன. இவ்வளவு உயரத்தில் காற்றின் அடர்த்தி மிக குறைவாக இருக்கும். இதன் காரணமாக சீனாவின் போர் விமானங்களால் தங்களின் முழு கொள்ளளவு ஆயுதங்களையோ அல்லது முழுமையான எரிபொருளையோ சுமந்து கொண்டு டேக்-ஆஃப் செய்ய முடியாது. இது, அவற்றின் தாக்குதல் திறனையும், பறக்கும் தூரத்தையும் பாதியாக குறைத்துவிடுகிறது.

    அதேபோல திபெத்தின் கடுமையான குளிர்காலம் மற்றும் புவியியல் சூழல் காரணமாக, சீன போர் விமானங்களை மீண்டும் எரிபொருள் நிரப்பி போருக்கு தயார் செய்வதற்கான நேரம் அதிகமாகிறது.

    Advertisement

    இந்தியாவின் பாசிட்டிவ் பக்கம்

    அப்படியே மறுபுறம் இந்தியா பக்கம் வந்தால்.. நமக்கு எல்லையோர பகுதிகளில் சில உயரமான ரன் வே இருந்தாலும், முக்கியமான போர் விமானங்கள் ஹசிமாரா, சாபுவா, அம்பாலா போன்ற சமவெளி தளங்களிலிருந்தே இயங்குகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து வெறும் 100-200 மீ உயரத்திலேயே உள்ளன.

    இதனால் இந்திய ரஃபேல் மற்றும் சுகோய் விமானங்கள் தங்களின் முழு எடையுள்ள ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் அதிக தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறனை பெற்றுள்ளன. மேலும் இந்தியாவின் ரெஸ்பான்ஸ் நேரமும் மிக குறைவாகும். இதெல்லாம் இந்தியாவின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாகும்.

    Advertisement

    இதை கவனிக்க வேண்டும்

    என்னதான் நமக்கு சில பாசிடிவ் அம்சங்கள் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி கவலைக்குறியதாய் இருக்கிறது. சீனாவிடம் 1,800க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. இதில் 5ம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-20 கூட்டு எண்ணிக்கை மட்டும் 300-500 வரை இருக்கும்.

    இந்தியாவிடம் குறைந்த விமானப்படைப்பிரிவுகள்தான் இருக்கின்றன. பொதுவாக 18 போர் விமானங்களை கொண்ட குழுவைதான் ஒரு விமானப்படைப்பிரிவு என்று சொல்வார்கள். இந்திய அரசு அனுமதித்துள்ள மொத்த படைப்பிரிவுகளின் எண்ணிக்கைக்கும், தற்போது நடைமுறையில் உள்ள எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.

    Advertisement

    விமானங்கள் குறைவு

    ஒரே நேரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் அச்சுறுத்தல் வந்தால், அதை சமாளிக்க 42.5 போர் விமானப்படைப்பிரிவுகள் தேவை. மொத்தம் 765 விமானங்கள் தேவை. ஆனால், 29 படைப்பிரிவுகள்தான் தற்போது செயல்பட்டு வருகின்றன. அதாவது 522 விமானங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை விட 240 விமானங்கள் குறைவாக இருக்கின்றன.

    ஓய்வு பெறும் விமானங்கள்

    இதற்கு காரணம் இந்திய விமானப்படையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த மிக்-21, மிக்-27 மற்றும் ஜாகுவார் போன்ற பழைய சோவியத் கால போர் விமானங்கள், தங்களின் ஆயுட்காலம் முடிந்து ஒவ்வொன்றாக ஓய்வு பெற்று வருகின்றன. ஓய்வு பெறும் விமானங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, புதிய போர் விமானங்களை வாங்குவதிலோ அல்லது உள்நாட்டிலேயே தயாரிப்பதிலோ கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துவதாக, யுரேஷியன் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    Topics: #india #china #iaf

    English Summary

    China: As of today, China possesses more than 1,800 combat aircraft, including over 500 'stealth' aircraft designed for surprise attacks. Nevertheless, it cannot defeat India.