மெட்ரோ ரயிலில் பெண் பயணியை ரகசியமாக போட்டோ எடுத்த CISF வீரர்! துப்பாக்கி நீட்டி மிரட்டியதால் பதற்றம்

  • டெல்லி: மெட்ரோ ரயிலில் தனக்கு எதிரே உட்கார்ந்திருந்த பெண் பயணியை CISF வீரர் ஒருவர் ரகசியமாக மொபைலில் போட்டோ எடுத்திருக்கிறார். இது குறித்து சக பயணிகள் கேள்வி எழுப்பியபோது.. அவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி CISF வீரர் மிரட்டியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    நேற்றிரவு 12.40 மணியளவில் CISF வீரர் ஒருவர் டெல்லி மெட்ரோ ரயிலில் எய்ம்ஸ் மருத்துவமனை வழியாக பயணித்திருக்கிறார். அப்போது எதிரில் இருந்த பெண் பயணியை அவரது அனுமதியின்றி போட்டோ எடுத்திருக்கிறார். இதை பக்கத்தில் இருந்த பயணிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    நான் போட்டோ எல்லாம் ஒன்னும் எடுக்கல என்று CISF வீரர் மறுக்க.. அப்படியெனில் மொபைலை காட்டு என்று மற்ற பயணிகள் கேட்டிருக்கிறார்கள். இப்படியாக வாக்குவாதம் முற்ற.. ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன CISF வீரர் தன்னுடைய சர்வீஸ் பிஸ்டலை எடுத்து பயணிகளை மிரட்டியிருக்கிறார். இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. CISF வீரரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

    துணை ராணுவ வீரர், ராணுவ வீரர், போலீஸ் என சீருடை பணியில் இருப்பவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுவது நாட்டை பாதுகாக்கத்தான். பொதுமக்களை துப்பாக்கி நீட்டி அச்சுறுத்துவது என்பது கடுமையான ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். துப்பாக்கி லோட் செய்யப்பட்டிருக்கிறதோ.. இல்லையோ! அதெல்லாம் இரண்டாம்பட்சம்.. முதலில் துப்பாக்கியை பொதுமக்களை நோக்கி நீட்ட கூடாது.

    Advertisement

    இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயிலில் CISF வீரர் நடந்துக்கொண்ட விதம் குறித்து CISF தலைமை அதிருப்தி தெரிவித்திருக்கிறது. CISF வீரரின் பொறுப்பற்ற செயல் காரணமாக அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்வதாகவும்.. அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவில்லை என்றாலும், வீடியோவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை CISF மேற்கொண்டிருக்கிறது.

    English Summary

    CISF Personnel Accused of Taking Womans Photos Secretly: A CISF personnel secretly took a photo on his mobile phone of a female passenger seated opposite him on the metro train. When fellow passengers questioned him about this, he threatened them by pointing his gun at them—an incident that has caused shock.