NALSAR சட்ட மாணவர்களை பழிவாங்கிய முயன்று.. மொக்கை வாங்கிய பார் கவுன்சில்! சீரியஸாக களமிறங்கிய CJP

  • டெல்லி: ஹைதராபாத் நல்சார் (NALSAR) சட்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை அழைக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே மாணவர்களின் பார்கவுன்சில் பதிவை நிறுத்தி வைப்பதாக.. இந்திய பார் கவுன்சில் அறிவிக்க.. உடனே களத்தில் இறங்கியது கரப்பான் ஜனதா கட்சி. இப்போது பார் கவுன்சில் தனது முடிவை வாபஸ் பெற்றிருக்கிறது. இருந்தாலும்.. பார்கவுன்சில் தலைவருக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வாயை விட்டதால்தான் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்கிற அமைப்பே உருவானது. இந்த அமைப்பு நடந்திய போராட்டங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் பணிந்தது. இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு போராட்டத்திற்கான சூழல் உருவாகியிருக்கிறது.

    Advertisement

    ஹைதராபாத்தில் சம்பவம்

    2026ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்து வெளியேறும் நால்சால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பட்டம் வழங்க.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்தை அழைக்க, பல்கலைக்கழகம் முடிவெடுத்திருந்தது. அனால்.. மாணவர்கள் ஒத்துழைக்கவில்லை. சுமார் 450 மாணவர்கள் சேர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், தலைமை நீதிபதி சூர்ய காந்தை அழைப்பதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருந்தனர்.

    மாணவர்கள் கடிதம்

    "சமீப காலமாக நீதித்துறையில் நடக்கும் சில நிகழ்வுகள் மற்றும் சூர்ய காந்தின் கருத்துக்கள் தங்களுக்கு அதிருப்தி அளித்திருக்கிறது. குறிப்பாக கடந்த ஜூலை 20ம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சூர்ய காந்த் தெரிவித்த கருத்துக்கள், நடந்துக்கொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது" என மாணவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

    Advertisement

    தலைமை நீதிபதி மீது அதிருப்தி

    ஜந்தர் மந்தரில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர்கள் வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்க முயன்றபோது, வீடியோக்களை பார்க்க ஆர்வம் இல்லை என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த கூறியிருந்தார். இந்த விஷயத்தையும் மாணவர்கள் தங்கள் கடிதங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

    "எல்லாவற்றையும் விட, சட்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என்பது அரசியலமைப்பு உரிமைகள், நீதி கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், தலைமை நீதிபதியின் சமீபத்திய செயல்பாடுகள் இதற்கு முரணாக இருக்கிறது" என்று மனதில் பட்டதை அப்படியே கடிதமாக எழுதியிருந்தனர்.

    Advertisement

    பார் கவுன்சில்

    ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பார் கவுன்சில் சும்மா இருக்குமா? அது தன் நடவடிக்கையை தொடங்கியது. 2026ல் நல்சார் பல்கலையிலிருந்து பட்டம் பெறும் யாரையும், மாநில பார் கவுன்சில்கள் பதிவு செய்யக்கூடாது என்று, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மாநில பார் கவுன்சில்களுக்கு உத்தரவிட்டார். இது ஏற்கெனவே சூடாக இருக்கும் சட்ட மாணவர்கள் மத்தியில்.. இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சட்ட கல்லூரி மாணவர்கள்

    லா காலேஜ் ஸ்டூடன்ட் சும்மா லேசுபட்ட ஆள் கிடையாது. சமூகத்தில் எங்கு பிரச்சனை நடந்தாலும் அதற்கு எதிரான முதல் குரல் சட்ட கல்லூரியிலிருந்துதான் வரும். அப்பேற்பட்ட மாணவர்களை.. பார் கவுன்சிலில் ரெஜிஸ்டர் செய்ய விடமாட்டோம் என்று இந்திய பார் கவுன்சில் சொன்னது.. நாடு முழுவதும் சட்ட கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பான மன நிலையை உருவாக்கியது.

    Advertisement

    களத்தில் கரப்பான் ஜனதா கட்சி

    மட்டுமல்லாது கரப்பான் ஜனதாக கட்சி இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டது. பார் கவுன்சில் தனது முடிவை பின்வாங்கவில்லை எனில், பார் கவுன்சில் அலுவலகங்களையும், மனன் குமார் மிஸ்ராவின் வீட்டையும் மாணவர்கள் முற்றுகையிடுவார்கள் என்று கட்சியின் தலைவர் சவுரவ் தாஸ் கூறியிருந்தார். இந்த அறிவிப்பு பிறகு, பார் கவுன்சில் தனது நடவடிக்கையை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது. இருப்பினும் மனன் குமார் மிஸ்ராவுக்கு எதிராக விரைவில் போராட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

    பார் கவுன்சிலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, மனன் குமார் பெரியதாக கண்டுக்கொள்வதில்லை என்றும், அவரை உடனே மாற்ற வேண்டும் என்றும் நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இந்த பிரச்சனையும் வெடித்திருப்பதால்.. சீக்கிரமாகவே அவருக்கு எதிராக போராட்டங்கள் நடக்கலாம்.

    Topics: #cji #student

    English Summary

    Bar Council to Withdraw NALSAR Enrolment Ban: A decision was made to invite the Chief Justice of the Supreme Court to the convocation ceremony of NALSAR University of Law in Hyderabad. Students opposed this move. When the Bar Council of India announced the suspension of the students' Bar Council registration in response, the 'Karappan Janata Party' immediately stepped in. The Bar Council has now withdrawn its decision; however, it is reported that protests against the Bar Council Chairman are likely to erupt.