டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் ஆப்ஜித் தீப்கேவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் கட்சியில் இணைந்து அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்து இருக்கிறார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் ஆப்ஜித் தீப்கேவுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அழைப்பு விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம்தாஸ் அத்வாலே, மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக உள்ளார்.
இவரது இந்திய குடியரசு கட்சி (ஏ), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வரும் நிலையில், கரப்பான் பூச்சி கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே பேசியதாவது:- கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கே, அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற தங்கள் கட்சியில் இணைவது குறித்து பரிசீலிக்க வேண்டும். அவர் ஒரு அம்பேத்கரியவாதி என்றே நான் நினைக்கிறேன். அவர் துடிப்பான இளைஞராக உள்ளார். எனவே, எங்கள் கட்சியில் இணைவது குறித்து அவர் பரிசீலிக்க வேண்டும். தவறுகள் செய்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று நம்பும் அரசுதான் எங்கள் அரசு. எனவே, அவர் எங்கள் கட்சியில் இணைய வேண்டும்" என்றார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் ஆப்ஜித் தீப்கேவுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இப்படி வெளிப்படையாக அழைப்பு விடுத்த போதிலும், தீப்கே இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும், இதற்கு முன்பாக பேசுகையில், ஆப்ஜித் தீப்கே, தேர்தல் அரசியலில் ஈடுபட போவது இல்லை என்று பேசியிருந்தார் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒரு இயக்கமாகவே தொடரும் என்றும் கூறியிருந்தார். இந்த மாத துவக்கத்தில் பேசிய ஆப்ஜித் தீப்கே கூறுகையில், "அரசியல் மீதும் தேர்தல் நடைமுறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இன்னொரு அரசியல் கட்சியை விட ஒரு பொது இயக்கம்தான் நாட்டிற்கு தேவை. ஊடகங்கள், நீதித்துறை ஆகியவற்றின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கிவிட்டார்கள்" என்றார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஆப்ஜித் தீப்கே, நாட்டில் கல்வித்துறையில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்தார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரிலான இயக்கத்தை தொடங்கிய ஆப்ஜித் தீப்கே நடத்திய இந்த போராட்டம் நாடு முழுவதும் ஆதரவு பெருகிறது. டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததால், வேறு வழியில்லாமல் பணிந்த மத்திய அரசு, தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்தது. இதையடுத்து, புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. டெல்லி ஜந்தர் மந்தரில் விரைவில் இரண்டாவது கட்ட போராட்டம் தொடங்கப்படும் என்றும் வலுவான போராட்டமாக இது அமையும் என்றும் அண்மையில் ஆப்ஜித் தீப்கே கூறியிருந்தார்.எங்கள் கட்சியில் இணைய வேண்டும்
ஆப்ஜித் தீப்கே பதில்
இரண்டாவது கட்ட போராட்டம் தொடங்கப்படும்