ஜந்தர் மந்தரை நோக்கி பேரணி.. தேசியக் கொடியுடன் சென்ற கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் மீண்டும் கைது!

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

    Advertisement

    எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் உள்ளன. கடந்த 10 மாதங்களில் மட்டும் பிற தேர்தல் ஆணையர்கள் 14 முறை இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளது.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் தான் பிரதான கோரிக்கையாக இருக்கிறது. நேற்றைய தினம் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மிக பெரிய பேரணியை நடத்தியிருந்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

    அதேபோல கரப்பான் பூச்சி கட்சியும் இந்த விவகாரத்தில் டெல்லியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறது. கரப்பான் பூச்சி கட்சியை பொறுத்தவரை டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தான் போராட்டங்களை அறிவித்திருந்தது. இருப்பினும், நேற்றைய தினம் டெல்லி போலீசார் வெளியிட்டிருந்த அறிவிப்பில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டது.

    Advertisement

    இருப்பினும், இன்றைய தினம் லியில் ஜந்தர் மந்தரை நோக்கி கரப்பான் பூச்சி தலைவர்கள் பேரணி செல்ல முயன்றனர். டெல்லியில் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசியக் கொடியுடன் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணி செல்ல முயன்ற சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    English Summary

    Cockroach Janata Party leaders Saurav Das and Ashutosh Ranka were arrested again by Delhi Police(கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் கைது): CJP leaders arrested latest news in tamil.