டெல்லியில் சிஜேபி இன்று போராட்டம்.. யாரும் தடையை மீறாதீங்க.. ஜந்தர் மந்தரில் குவிந்த போலீஸ் வார்னிங்

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சி இன்று போராட்டத்தை அறிவித்துள்ளது. சிஜேபி போராட்டத்தை முடக்க நேற்றிரவு முதலே டெல்லியில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், ஜந்தர் மந்தரில் போராட அனுமதி இல்லை என்றும், யாரும் தடையை மீற வேண்டாம் என்று டெல்லி காவல்துறையால் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவுக்கும், மாணவர்களின் தற்கொலைக்கும் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று சிஜேபி கட்சியினர் நடத்திய போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. நீண்ட போராட்டத்திற்கு பின் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்த நிலையில் எஸ்ஐஆர் விவகாரத்தில் நடந்த குளறுபடிகளை சிஜேபி கட்சி கையில் எடுத்துள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி சிஜேபி கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்டோபர் 2 முதலே சிஜேபி கட்சி அடையாள போராட்டங்களை பல்வேறு நகரங்களிலும் நடத்தி வருகிறது. மறுபக்கம் சிஜேபி கட்சிக்கு முன் காங்கிரஸ் கட்சியும் இந்த போராட்டத்தை கையில் எடுத்து போராடி வருகிறது.

    இருப்பினும் அக்டோபர் 1ம் தேதியான இன்று சிஜேபி டெல்லியில் போராட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே ஜந்தர் மந்தரில் சிஜேபி நடத்திய போராட்டம் பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்தது. மீண்டும் ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியினர் மற்றும் மாணவர்கள் அமைப்பு ஒன்றாக கூடினால், அந்த போராட்டம் விஸ்வரூபம் எடுக்கலாம்.

    Advertisement

    இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் மொபைல் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஜன்பத் மற்றும் கர்த்தவ்யா பாதை பகுதிகளில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    24 மணி நேரத்திற்கு இந்த இணைய சேவை முடக்கும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூட கேட்டு கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு செல்லும் ரயில்களும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி காவல்துறை, துணை ராணுவப் படையை சேர்ந்த 20 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இதனை மீறி சிஜேபி போராட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிஜேபி கட்சியுடன் துருவ் ராதே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் கை கோர்த்துள்ளனர். இந்த நிலையில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், யாரும் தடையை மீற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    English Summary

    CJP Protest Against CEC Gyanesh Kumar: Internet Blocked, Delhi Police Denies Permission