விஜய்யைப் பார்த்து கத்துக்கோங்க! வடஇந்திய டிரெண்ட்.. ராகுல் டீம் அப்செட்! தேசிய அளவில் எகிறும் மவுசு

  • டெல்லி: 2029 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி தவெக தலைவர் விஜய் எடுத்து வரும் வியூகங்கள், ஆளுங்கூட்டணியில் உள்ள காங்கிரஸை நாளுக்கு நாள் கலங்கடித்து வருகிறது.

    Advertisement

    அண்மையில் வெளியான 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் பிரதமர் ரேஸில் விஜய் 9.2 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்தது, உ.பி., பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தவெக கட்சிக் கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்கள் என களம் சூடாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்திற்கு ராகுல் காந்தியின் தூதர்களாக வந்த மாணிக்கம் தாகூரையும் பிரவீன் சக்கரவர்த்தியையும் விஜய் கண்டுகொள்ளாமல் திருப்பி அனுப்பியது காங்கிரஸ் மேலிடத்தை ஏற்கனவே கொந்தளிக்க வைத்திருந்தது.

    Advertisement

    இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ள கருத்துகள், ராகுல் காந்தி கேம்பை மேலும் உச்சக்கட்ட விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

    மத்திய நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களையும் உள்ளடக்கிய பல்வேறு துறை சார்ந்த நிலைக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

    சபாநாயகர் ஓம் பிர்லாவின் அதிரடி அட்வைஸ்!

    சமீபத்தில் இந்த நிலைக்குழுக்களின் தலைவர்களிடம் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு முக்கியமான ஆலோசனையை வழங்கியுள்ளார் மாநிலங்களுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது, அந்தந்த மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்துப் பேசுங்கள். விஜய்யை பாருங்கள்.. விஜய்யிடம் நீங்கள் நிறைய கற்றுக்கொள் முடியும்.

    Advertisement

    கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் அவர். அதனால் அவரிடம் பேசுங்கள்.. நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும்., என்று கூறி உள்ளாராம்.

    ஏற்கனவே இந்திய மக்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்படும் ஒரு நட்சத்திர முதலமைச்சராக தற்போது விஜய் உருவெடுத்துள்ளார். உ.பி., பிகார், மத்தியப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களின் சமூக வலைதளங்களில், இந்தி மொழியில் விஜய்யின் நிர்வாகத் திறன் மற்றும் அதிரடி முடிவுகள் குறித்த வீடியோக்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

    விஜய்யைச் சந்திக்கப் படையெடுக்கும் வெளிமாநில எம்.பி.க்கள்

    ஏற்கனவே சில குழுக்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தலைமைச் செயலகத்தில் விஜய்யை நேரில் சந்தித்து மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் தொடர்பாக விவாதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    திரிணாமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.பி. சயோனி கோஷ் அண்மையில் விஜய்யைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பல்வேறு தேசியக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் சென்னைக்கு வந்து விஜய்யைச் சந்திப்பது, தேசிய அளவில் அவரது ஆளுமைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

    சபாநாயகரின் இந்த வெளிப்படையான அறிவுரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் இடம்பெற்றுள்ளபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய எம்.பி.க்கள், முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அசுர மக்கள் செல்வாக்கை சுட்டிக்காட்டி, "2029-ல் விஜய்தான் நாட்டின் அடுத்த பிரதமர்; 1996 தேவகவுடா பாணியில் 100 இடங்களைப் பிடித்து மத்தியில் ஆட்சி அமைப்போம்" என தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக முழங்கி வருகின்றனர்.

    Advertisement

    உச்சக்கட்ட அதிருப்தியில் ராகுல் முகாம்!

    தேசிய அளவில் நரேந்திர மோடிக்கு மாற்றுத் தலைவராகத் தன்னை நிலைநிறுத்த ராகுல் காந்தி தீவிரமாகப் போராடி வரும் வேளையில், பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் ஓம் பிர்லாவே விஜய்யைப் பாராட்டிக் களத்திற்கு அனுப்புவதும், அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் விஜய்யை நோக்கிப் படையெடுப்பதும் ராகுல் காந்தி முகாமுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய அரசியலில் ராகுல் காந்தியின் இடத்திற்கே விஜய் நேரடியாக சவால் விடுத்து வருவதையும், வட மாநிலங்களிலேயே விஜய்க்கான ஆதரவு அலை எழுவதையும் ஜீரணிக்க முடியாமல் ராகுல் தரப்பு உச்சக்கட்ட அதிருப்தியில் ஆழ்ந்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    English Summary

    CM Vijay’s Rising National Famous Irks Rahul Camp: Om Birla’s Praise