ஆர்எஸ்எஸ் சொல்வதை கேளுங்கள்.. சொல்வது கரப்பான் பூச்சி கட்சி தலைவர்.. என்ன மேட்டர்! பின்னணி

  • சென்னை: கல்வி சீர்திருத்தங்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்த கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் திப்கே, சமீபத்தில் அளித்திருந்த நேர்காணலில் பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். பாஜக தன்னை ஆர்எஸ்எஸ் அமைப்பை விட பெரிய அமைப்பாக நினைத்து கொள்வதாக சாடிய திப்கே, ஆர்எஸ்எஸ் சொல்வதை பாஜக கேட்க வேண்டும் எனவும் சாடினார்.

    Advertisement

    கடந்த மாதம் நீட் தேர்வுக்கு கரப்பான் பூச்சி கட்சி மிக பெரிய போராட்டத்தை நடத்தியது. இதற்கு நாடு முழுக்க ஆதரவு கிடைத்த நிலையில், மத்திய பாஜக அரசு பின்வாங்க நேரிட்டது. இதற்கிடையே பாஜக - ஆர்எஸ்எஸ் தொடர்பாக கரப்பான் பூச்சி கட்சி தலைவர் அபிஜீத் திப்கே சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஆர்எஸ்எஸ்

    ஆர்எஸ்எஸ் அமைப்பை விட பாஜக தாங்கள் ஒரு பெரிய அமைப்பாகிவிட்டதாக நினைப்பதாகவும், ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி வரும் கருத்துகளுக்கு பாஜக செவிசாய்க்க வேண்டும் என்றும் திப்கே தெரிவித்துள்ளார்.

    மோகன் பகவத் சமீபத்தில் நியூயார்க்கில் பேசியபோது, "இந்தியாவில் முஸ்லிம்களே இருக்கக்கூடாது என்று எந்தவொரு இந்துவும் நினைத்தால், அவர் இந்துவாக இருக்க முடியாது" என்று கூறியிருந்தார். இந்த கருத்து தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அபிஜீத் திப்கே, "பாஜக மோகன் பகவத் கூறுவதை கேட்க வேண்டும். 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் ஆர்எஸ்எஸை விட பெரியதாகிவிட்டதாக பாஜக நினைக்கிறது" என்று அவர் கூறினார்.

    Advertisement

    திப்கே

    போராட்டங்களை நடத்தி வரும் Gen Z தலைமுறையினரை தேச விரோதிகள் என்று அழைக்கக் கூடாது என்றும் மோகன் பகவத் ஏற்கனவே கூறியிருந்ததாக திப்கே குறிப்பிட்டார். அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி "அறிவுஜீவி நக்சல்" என்ற புதிய வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். மோகன் பகவத்தின் கருத்துகளைக் கேட்க பிரதமர் மோடி தயாராக இல்லை என்பதையே மீது தெளிவாக காட்டுவதாகவும் அபிஜீத் திப்கே தெரிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "ஆர்எஸ்எஸ் தலைவர் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து பேசுகிறார். போராடும் இளைஞர்களை அவமதிக்கக்கூடாது என்றும் கூறுகிறார். ஆனால் பிரதமர் இதுபோன்ற மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு ஆர்எஸ்எஸ் தான் முக்கிய காரணம். இது அனைவருக்குமே தெரியும். அப்படியிருக்கும்போது அந்த அமைப்பின் தலைவரான மோகன் பகவத் கூறுவதை பாஜக குறைந்தபட்சம் கேட்டுக்கொள்ள வேண்டும்" என்றும் திப்கே தெரிவித்தார்.

    Advertisement

    அரசியல் ஆசை

    இதனிடையே சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் சமீபத்தில் அளித்த பேட்டியில் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்களுக்கு அரசியல் ஆசை இருப்பதாக கூறியிருந்தார். இது தொடர்பாகவும் அபிஜீத் திப்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "வாங்சுக்கின் கருத்து திரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.. சௌரவ் தாஸ் மற்றும் ஆஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு அரசியல் லட்சியம் இருக்கிறதா என்று தான் வாங்சுக்கிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் திறமையானவர்கள், நல்ல தலைவர்கள் என்றும் ஊழல் எதிலும் ஈடுபடவில்லை.. போராட்டத்தை நேர்மையாக நடத்தியவர்கள் என்று மட்டுமே வாங்குசுக் தெரிவித்தார்.

    வாங்சுக்

    எதிர்காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று பின்னர் வாங்சுக்கிடம் கேட்கப்பட்டது. ஆனால் ஒரு நபர் எதிர்காலத்தில் என்ன முடிவு எடுப்பார் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று தான் அவர் கூறினார். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றே அவர் கூறினார். மேலும், அரசியல் லட்சம் இருந்தாலும் தவறில்லை என்று கூறியிருந்தார். இந்த கருத்தை தான் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்களுக்கு அரசியல் ஆசை என திரித்து பதிவிட்டு வருகிறார்கள்" என்றார்.

    English Summary

    Cockroach Janata Party Abhijit Dipke has criticised the BJP(பாஜகவை கடுமையாக விமர்சித்த கரப்பான் பூச்சி கட்சி): Cockroach Janata Party latest news in tamil.