ஞானேஷ் குமாரை மோடி விடமாட்டார்.. எதாவது செய்து காப்பாற்றிவிடுவார்.. கரப்பான் பூச்சி கட்சி தாக்கு

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கரப்பான் பூச்சி கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி போலீசார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஞானேஷ் குமாரை எந்த சூழலிலும், என்ன செய்தாவது பிரதமர் மோடி காப்பாற்றிவிடுவார் என்றும் தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Advertisement

    தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் இப்போது தீவிரமடைந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்தனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

    Advertisement

    போராட்டங்கள்

    அதைத் தொடர்ந்து நாடு முழுக்க ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. ஒரு பக்கம் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துகிறது. இன்னொரு பக்கம் கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்றைய தினம் கரப்பான் பூச்சி கட்சி டெல்லியில் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பே அதன் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இன்று அவர்களை உச்ச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

    கடும் தாக்கு

    இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி சார்பில் இன்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அசுதோஷ் ரங்கா, தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கு உதவும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நடந்த பல சம்பவங்களை யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

    Advertisement
    டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை விஜய்! ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடினால் கைதா? உதயநிதி கேள்வி

    தங்களது போராட்டம் தேர்தல் ஆணையத்துக்கும் ஞானேஷ் குமாருக்கும் எதிரானது என்று கூறிய ரங்கா, நாட்டை பாதுகாத்து முன்னேற்ற வேண்டிய தேர்தல் ஆணையம் தனது பொறுப்பில் இருந்து தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார். ஞானேஷ் குமாரை எந்த விலை கொடுத்தாவது பிரதமர் மோடி நிச்சயம் காப்பாற்றுவார் என்பதை நிரூபித்துவிட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

    கடத்திவிட்டார்கள்

    அசுதோஷ் ரங்கா மேலும், "நாங்கள் மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்து இறங்கினோம். அப்போது என்னையும் உடன் வந்தவர்களையும் விமானத்தில் இருந்து கடத்தி சென்றனர். "நாங்கள் விமானத்தில் இருந்து கடத்தப்பட்டோம். நான், தீப்கே மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்ட போது டெல்லி போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்.

    Advertisement
    இன்னொரு விக்கெட்டா ஞானேஷ் குமார்? போராட்டம் அத்தோடு ஒய்ந்து விடுமா? டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு டவுட்!

    சீக்கியர்கள் புனித தளம்

    தீப்கேவின் பாட்டி சனிக்கிழமை மரணமடைந்தார். அந்த தகவல் தெரிவிக்கப்பட்டபோதும் கூட போலீசார் மிக மோசமான முறையில் நடந்து கொண்டனர். அதை கூட பரபரப்பான காட்சியாக மாற்ற டெல்லி போலீசார் முயன்றனர். அதாவது அவரது பாட்டியின் மரணம் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டபோது, போலீசார் கேமராவையும் மைக்ரோஃபோனையும் தொடர்ந்து அருகே வைத்தனர். அதை பரபரப்பாகவே முயன்றனர்" என்று குற்றம்சாட்டினார்.

    புனிதமான குருத்வாரா பங்களா சாஹிப் அவமதிக்கப்பட்டதாகவும், இச்சம்பவம் சீக்கியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் கரப்பான் பூச்சி கட்சியின் சௌரவ் தாஸ் குற்றம் சாட்டினார். சீக்கியர்களின் மத வழிபாட்டுத் தலத்தை போலீசார் அவமரியாதை செய்துவிட்டதாகவும் அதற்கு அரசே காரணம் என்றும் விமர்சித்தார்.

    English Summary

    Cockroach Janata Party has accused Prime Minister Narendra Modi of protecting Chief Election Commissioner Gyanesh Kumar(தேர்தல் ஆணையரை சாடிய கரப்பான் பூச்சி கட்சி தலைவர்): Cockroach Janata Party latest news in tamil.