மாணவர் போராட்டம் சீசன் 2 ஆரம்பிக்க போகுது.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் கரப்பான் பூச்சி கட்சி!

  • டெல்லி: டெல்லியில் தங்களது தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்த யாரும் இடம் கொடுக்கக்கூடாது என்று திட்டமிட்டு பிரஷர் போடப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கே, மாணவர்களின் போராட்டம் சீசன் 2 விரைவில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த போராட்டம் மத்திய அரசையே தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க வைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து நாடு முழுக்க இளைஞர்களும் மாணவர்களின் தங்கள் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா

    இது ஒரு பக்கம் இருக்க கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே சில அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக தங்கள் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருவதாக கூறினார். அதாவது "ஜந்தர் மந்தர் சீசன் 2 எப்போது தொடங்கும்? என்று இன்ஸ்டாகிராமில் பலர் கேட்டு வருகிறார்கள். நான் இப்போது அதற்கான பதிலை சொல்லிக் கொள்கிறேன். மாணவர்கள் போராட்டமான ஜந்தர் மந்தர் சீசன் 2 மிக விரைவில் தொடங்க போகிறது" என்று திப்கே கூறினார்.

    Advertisement

    இதற்கிடையே டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி தன்னார்வலர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்ததாக திப்கே கூறினார். இதற்காக ஒரு அரங்கத்தை வாடகைக்கு எடுக்க முயன்றபோது, பலரும் அரங்கம் கொடுக்க மறுப்பதாக அவர் குற்றம்சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் வாடகைக்கு ஒரு அரங்கை எடுக்க பார்த்தோம். ஆனால், அது கிடைக்கவில்லை. யாரை கேட்டாலும் மேலே இருந்து பிரஷர் வருகிறது.. சாரி எங்களால் தர முடியாது என்றே சொல்கிறார்கள்.

    பாஜக மிரட்டல்

    தொடர் முயற்சிக்கு பிறகு ஒரு அரங்கை புக் செய்தோம். பணம் எல்லாம் கொடுத்துவிட்டோம். அதற்கான பில் கூட இருக்கிறது. இன்று தன்னார்வலர்கள் கூட்டம் நடக்கவிருந்தது. ஆனால், கூட்டம் தொடங்க கொஞ்ச நேரம் இருக்கும்போது அந்த அரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் வர ஆரம்பித்தது. கரப்பான் பூச்சி கட்சி கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் அவ்வளவு தான் தலைகீழாக கட்டி தொங்கவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு பாஜகதான் காரணம்!

    Advertisement

    பாஜக தான் பின்னால் இருந்து இதை எல்லாம் செய்கிறது. நாட்டின் இளைஞர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இதுபோல செய்கிறார்கள். இதுபோன்ற செயல்களால் எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்தால், அது தவறு" என்றார்.

    புதிய இயக்கம்

    நாட்டின் கிராமப்புற பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையில் கரப்பான் பூச்சி கட்சி புதிய மக்கள் கருத்து கேட்பு இயக்கத்தை வரும் சுதந்திர தினத்தில் தொடங்குகிறது. அதன்படி அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை பெற்றோர்களே நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    இதற்கிடையே அபிஜித் திப்கே மாணவர்களின் ஜந்தர் மந்தர் சீசன் 2 குறித்து கூறிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் உடனடியாக டிரெண்டானது. பலரும் இது குறித்த போஸ்ட்களை போட ஆரம்பித்தனர். இதற்கிடையே அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் மேலும், "இதுவே சீசன் 2தான். திறமையற்ற அரசுகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    எல்லாமே மாறும்!

    பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்பதற்காக நாடு முழுவதும் நாங்கள் புதிய மக்கள் இயக்கத்தை தொடங்குகிறோம். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 முதல் இதை நாங்கள் ஆரம்பிக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அவற்றின் நிலையை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும். இளைஞர்கள் பொறுப்பை ஏற்க ஆரம்பித்துவிட்டனர். சீக்கிரமே உண்மையான வளர்ந்த இந்தியா உருவாகும்" என்றார்

    English Summary

    Cockroach Janata Party founder Abhijit Dipke says Jantar Mantar protest Season 2 will begin soon(மீண்டும் போராட்ட களத்திற்கு வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி): Cockroach Janata Party latest news in tamil.