நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்! டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி!

  • டெல்லி: கடந்த சில நாட்களாகவே ஆன்லைனில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சி இப்போது முதல்முறையாகப் போராட்டங்களை நடத்துகிறது. போராட்டங்களுக்குத் தடை விதிக்க நீதிமன்றத்திற்குச் சிலர் சென்ற போதிலும், நீதிமன்றத்தில் தடை விதிக்கப்படவில்லை. நாளை இந்த கட்சி நடத்தும் போராட்டம் மிக பெரிய ஒரு நிகழ்வாக மாறியுள்ளது.

    Advertisement

    நமது நாட்டில் ஆன்லைன் இயக்கமாக உருவான கரப்பான் பூச்சி கட்சி நாளை முதல் முறையாகப் போராட்டம் நடத்துகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நாட்டில் நடக்கும் கல்வி குளறுபடிகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளனர். இந்த விசித்திரப் போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வருமாறு புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி

    இது தொடர்பாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தனது ட்விட்டரில், "நாளை காலை 9 மணிக்கு எல்லாரும் வண்டியை எடுங்க.. டெல்லியை நோக்கி வரோம்! ஜூன் 6, காலை 9 மணி - நாளை சந்திப்போம் சக கரப்பான் பூச்சிகளே..! இந்த சின்ன ஜோக்கை (Joke) ஒரு பெரிய புரட்சியாக மாற்ற வேண்டிய நேரம் இது.. டெல்லி வீதிகளில் அமைதியான முறையில் நமது எதிர்ப்பைப் பதிவு செய்யவுள்ளோம். எல்லாக் கண்களும் நம் மீதுதான் உள்ளன, அதனால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள்" என்றும் அதன் அமைப்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். இது டெல்லி வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.

    Advertisement

    வழக்கு

    மறுபுறம், இந்தக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தால் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றும், இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் உமேஷ் சந்திர சர்மா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை இந்த அமைப்பு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

    ஆனால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. "சட்டம் ஒழுங்கு விவகாரங்களை டெல்லி போலீஸ் பார்த்துக் கொள்ளும்" என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. தடை விதிக்க மறுக்கப்பட்டதால் இது காக்ரோச் கட்சியின் போராட்டத்திற்கு மறைமுகமாக கிரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. இதனால், மனுதாரர் தற்போது டெல்லி போலீசாரிடம் விரிவான மனுவை அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கட்டுப்பாடுகள்

    இதற்கிடையே காக்ரோச் ஜனதா கட்சி தங்களது தொண்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளையும் வழங்கியுள்ளது.

    கல்வி உரிமை மற்றும் சம வாய்ப்பை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடப்பதால், வரும்போது அனைவரும் கையில் தேசியக் கொடியையும், ஒரு புத்தகத்தையும் எடுத்து வர வேண்டும்.

    சோஷியல் மீடியாக்களில் யாராவது வம்புக்கு இழுத்தாலோ, ட்ரோல் செய்தாலோ அவர்களிடம் வாதாடக் கூடாது.

    போராட்டத்தில் யாராவது சந்தேகப்படும்படியோ அல்லது வன்முறையைத் தூண்டும்படியோ நடந்துகொண்டால், உடனே போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும்.

    டெல்லி வெயிலை எதிர்கொள்ளத் தேவையான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வர வேண்டும், உடல்நலத்திற்கு முன்னுரிமை தர வேண்டும்.

    Advertisement

    எதிர்பார்ப்பு

    நாளை நடைபெறும் இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் போராட்டமாக மாறியிருக்கிறது. இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டம் என்பதால் இது எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    English Summary

    Delhi High Court declined an emergency plea seeking a ban on the Cockroach Janata Party's June 6 protest(டெல்லியில் வெடிக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Cockroach Janata Party protest latest news in tamil.