மத்திய அரசு ஏமாற்றிவிட்டது.. மீண்டும் வெடிக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்? பேரணி அறிவிப்பு

  • டெல்லி: கரப்பான் பூச்சி கட்சியினர் இப்போது புதிய போராட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த மாதம் மத்திய அரசு தங்களிடம் பல்வேறு உறுதிமொழிகளை அளித்திருந்ததாக கூறியுள்ள கரப்பான் பூச்சி கட்சியினர், மத்திய அரசு அதை நிறைவேற்ற மறுப்பதால் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி டெல்லியில் அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    Advertisement

    கடந்த மாதம் கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய போராட்டத்தால் மத்திய அரசு பின்வாங்க வேண்டி இருந்தது. நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழலில் தான் மீண்டும் ஒரு போராட்டம் குறித்த அறிவிப்பை கரப்பான் பூச்சி கட்சியினர் அறிவித்துள்ளது.

    Advertisement

    அமைதி பேரணி

    அதாவது கடந்த மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதாகவும் இதை கண்டித்து வரும் செப்டம்பர் 5ம் தேதி அமைதி போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும் கரப்பான் பூச்சி கட்சி அறிவித்துள்ளது.

    டெல்லியில் இந்தியா கேட் முதல் நியூ டெல்லி போலீஸ் தலைமையகம் வரை நடைபெறும் இந்த பேரணிக்கு.. உயிரிழந்த நீட் மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற பேரணியின்போது போலீஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் தலைமை வகிப்பார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி

    இன்றைய தினம் கரப்பான் பூச்சி கட்சியின் தேசிய செயற்குழு பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போது இளைஞர்களுக்கு மத்திய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது அல்லது ரத்து செய்வது, உயிரிழந்த நீட் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 25ஆம் தேதி அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற மறுப்பதாகவும் தொழில்நுட்ப காரணங்களையே மத்திய அரசு தொடர்ந்து சொல்லி வருவதாகவும் கரப்பான் பூச்சி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் மேலும், "எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒரு மாதமாக அரசு நிறைவேற்றாமல் காலதாமதம் செய்து வருகிறது. தொழில்நுட்ப காரணங்களையே காரணமாக சொல்லி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் முன்பும்கூட தெளிவான உறுதிமொழிகளை வழங்குவதை தவிர்த்து வருகிறது" என்று சாடியுள்ளது.

    Advertisement

    சரமாரி குற்றச்சாட்டு

    நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை குறித்த பட்டியலை வழங்குமாறு ஆகஸ்ட் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கேட்டபோதும், அவற்றை ஒரே நேரத்தில் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு தெளிவான உறுதிமொழி அளிக்கவில்லை என்றும் கரப்பான் பூச்சி கட்சி கூறியுள்ளது. மத்திய அரசு இது போல காலம் தாழ்த்தி வருவதால் தாங்கள் மீண்டும் வீதிக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கரப்பான் பூச்சி கட்சி தெரிவித்துள்ளது.

    பேரணி

    கரப்பான் பூச்சி மேலும் கூறுகையில், "கடந்த ஜூலை 25ஆம் தேதி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நம்பியே நாடு தழுவிய போராட்டத்தை வாபஸ் பெற்றோம். எங்கள் பொறுமையை பலவீனமாகக் கருதக்கூடாது. அரசு எங்களை ஏமாற்றக்கூடாது. இதை கண்டித்தே பேரணி நடத்தவுள்ளோம். செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா கேட்டில் இந்த பேரணிக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் ஆதரவு தர வேண்டும்" என்றனர்.

    English Summary

    A new peace march will be held in Delhi on September 5 over alleged delays in fulfilling promises(கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டம்): Cockroach Janata Party protest latest news in tamil.