டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா இன்று போராட்டம்.. ஜந்தர் மந்தரில் 1,000 போலீஸ் குவிப்பு!

  • டெல்லி: டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ அனுமதி கோரப்படவில்லை என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரபரப்பை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சி இப்போது முதல்முறையாகப் போராட்டம் அறிவித்துள்ளது. போராட்டங்களுக்குத் தடை விதிக்க நீதிமன்றத்திற்குச் சிலர் சென்ற போதிலும், நீதிமன்றத்தில் தடை விதிக்கப்படவில்லை. இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் அனுமதி கோரப்படவில்லை என்று டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜந்தர் மந்தரில் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகள் விவாதப்பொருளானது. இந்த பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்ற பக்கம் தொடங்கப்பட்டது. இந்த பக்கத்தின் ஃபாலோயர்கள் எண்ணிக்கை சில நாட்களில் பாஜகவின் ஃபாலோயர்கள் எண்ணிக்கையைத் தாண்டியது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு அந்த இன்ஸ்டா பக்கத்திற்கு தடை விதித்தது.

    பின்னர் அதே பெயரில் மீண்டும் ஒரு பக்கம் தொடங்கப்பட்ட நிலையில், அதிலும் ஃபாலோயர்கள் எண்ணிக்கை தொடங்கியது. இதன் நீட்சியாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற ஆன்லைன் இயக்கம் களத்திலும் செயல்பட துடிப்பு காட்டி வருகிறது. தனது கட்சிக்கு மூன்று செய்தித் தொடர்பாளர்களையும் நியமனம் செய்தது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே இன்று காலை டெல்லி திரும்புகிறார்.

    Advertisement

    10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

    நீட் குளறுபடி, சிபிஎஸ்இ விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டு வருமாறு புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் போராட்டத்திற்கு இதுவரை அனுமதி கோரப்படவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜந்தர் மந்தரில் முன்னெச்சரிக்கையாக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து டெல்லி போலீஸ் கூறுகையில், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அனுமதி கோரிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் அனுமதி கோரி விண்ணப்பித்தால், அதனை பரிசீலிப்போம்" என்றனர்.

    Advertisement

    இது குறித்து டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தள பதிவுகள் மற்றும் இணையத்தில் பரவிய தகவல்கள் மூலமாகவே இந்த போராட்டம் குறித்து அதிகாரிகளுக்கு தெரியவந்ததாக கூறப்பட்டது. அபிஜீத் திப்கே தலைமையிலான இந்த அமைப்பிடமிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அபிஜீத் திப்கே இன்று டெல்லி திரும்பியதும் நேரடியாக சென்று போலீஸ் அனுமதி கோர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் அங்கு இன்று காலை முதலே போலீஸ் தடுப்புகளை அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    Cockroach Janata Party has called for a protest at Delhi's Jantar Mantar over the NEET and CBSE issues. Although no official permission has been sought, Delhi Police have deployed around 1,000 personnel as a precautionary security measure.