இன்று வெடிக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. டெல்லியில் திரளும் இளைஞர்கள்.. போலீஸ் எச்சரிக்கை

  • டெல்லி: தலைநகர் டெல்லியில் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சி தலைவர்கள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். டெல்லி கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் மக்கள் தேசிய கொடியுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசார் இந்த போராட்டத்தில் மக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    நமது நாட்டில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் இப்போது தீவிரமடைந்து வருகிறது. எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்பதே பிரதான குற்றச்சாட்டு! ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டங்களில் இறங்கியுள்ளது.

    Advertisement

    கரப்பன் பூச்சி கட்சி

    இன்னொரு பக்கம் கரப்பன் பூச்சி கட்சியும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து போராட்டத்தில் இறங்கியுள்ளது. கடந்த வாரமே ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை அறிவித்திருந்தது. இருப்பினும், போலீசார் அந்த போராட்டத்திற்கு அனுமதி தரவில்லை. மேலும், கரப்பான் ஜனதா கட்சியினரும் விமானத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும், அன்று போராட்டங்களில் பங்கேற்க முயன்ற பலரும் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.

    மீண்டும் போராட்டம்

    இந்த சூழலில் தான் கரப்பான் பூச்சி ஜனதா இன்று மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது. டெல்லி கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில் மக்கள் தேசிய கொடியுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசார் இந்த போராட்டத்தில் மக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதியில் 11 பேர் கொண்ட குழுவினர் மட்டுமே தேசிய கொடியை ஏந்தி, தேசிய கீதம் பாடுவதற்கு ஏற்ற இடத்தில் ஏற்பாடு செய்து தர முடியும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. தேசியக் கொடியை ஏந்துவதும், தேசிய கீதம் பாடுவதும் உரிய விதிமுறைகள் உள்ளன என்றும் அதற்கு உட்பட்டு இந்த நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதை, கண்ணியம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    டெல்லி உயர் நீதிமன்றம்

    இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், டெல்லி காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்போது போராட்டத்தை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக காவல்துறை அளித்த உறுதிமொழியை நீதிமன்றம் ஏற்று கொண்டது குறிப்பிடத்தக்கது..

    Advertisement

    தடை உத்தரவு

    மேலும், டெல்லி போலீசார் கனாட் பிளேஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் BNSS சட்டத்தின் 163ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் இருப்பதாகத் தெரிவித்தது. இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. தற்போதைய பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது. மேலும், பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்ட காவல்துறை, சென்ட்ரல் பார்க் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நிர்வாக காரணங்களுக்காக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியானது.

    English Summary

    Cockroach Janata Party leaders have called for a protest against alleged election irregularities(டெல்லியில் வெடிக்கும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்): Cockroach Janata Party Protest Today latest news in tamil.