தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டத்தை தொடங்கிய கரப்பான் பூச்சி கட்சி!

  • டெல்லி: எஸ்ஐஆர் பணிகளில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்துள்ள புகார் தேசிய அரசியலை அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் 2 ஆணையர்களே எஸ்ஐஆர் பணிகளில் மோசடி நடைபெற்றதாக போர் கொடி தூக்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக எதிர்த்து போராடுகின்றன. ஞானேஷ்குமார் 48 மணி நேரத்தில் பதவி விலக கரப்பான் பூச்சி அவகாசம் கொடுத்தது. அவர் பதவி விலகாததால் கரப்பான் பூச்சி கட்சி ஜனதா தளம் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முன்னதாக பீகார் மாநிலத்திலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலில் சிறப்பு சீர்திருத்தமான எஸ்ஐஆர் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். தற்போது தேர்தல் ஆணையத்திற்குள்ளேயும் இது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    எதிர்க்கட்சிகள் போராட்டம்

    தேர்தல் ஆணையர்களாக உள்ள சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி எஸ்ஐஆர் குளறுபடி குறித்து ஆட்சேபனை தெரிவித்தனர். கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்து பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய வாக்காளர் இணைப்பு, பழைய வாக்காளர்களை நீக்குதல், மேல்முறையீடு, ஷாப்ட்வேர், பார்ம் 6 திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அந்த புகாரை பொருட்படுத்தவில்லை.

    இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணைய செயல்பாட்டில் மத்திய பாஜக அரசின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. "இந்திய தேர்தல் முடிவுகள் திருத்தப்பட்டுள்ளது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது எப்படி. மோடியும், அமித்ஷாவும் சதி செய்துள்ளனர். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். அவரை அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்க வேண்டும் "என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

    Advertisement

    மும்பையில் கரப்பான் பூச்சி

    இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப்பட்டது. இதேபோல, ஞானேஷ் குமார் 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். அவர் பதவி விலகாவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கடந்த வாரம் கரப்பான் பூச்சி ஜனதாதளம் அறிவித்தது. ஞானேஷ்குமார் விலகிவில்லை என்பதால் கரப்பான் பூச்சி ஜனதாதளம் அக்டோபர் 2 (இன்று) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவதாக அறிவித்தது.

    இன்று மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தை அறிவித்துள்ளது. அந்தக் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஞானேஷ்குமார் மீது கிரிமனல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது. வரும் நாட்களில் டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.

    Advertisement

    வெடிக்கும் விவகாரம்

    தேவைப்பட்டால் ஜந்தர் மந்தரில் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இன்று முதல் கரப்பான் பூச்சி கட்சி தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா தளம் நடத்திய போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதனால் வரும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்

    கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் - மந்தரில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜன்பத், படேல் சௌக், மத்திய செயலகம் உள்ளிட்ட 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மும்பை சிவாஜி பூங்கா நுழைவு வாயிலிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    English Summary

    SIR complaint sparks controversy in national politics. Cockroach Janata party to protest against ECI CEC Gyanesh kumar all over country Today.