வாஷிங்டன்: ''கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் அபிஜித் தீப்கேவிற்கு அமெரிக்க நன்கொடையாளர்களிடம் இருந்து நன்கொடையாக நிதி வருகிறது. இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் புறப்பட்டுள்ளனர். இதனை கண்டு பயப்பட வேண்டாம். இவர்களுக்கு எதிராக இந்திய மண்ணில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற ஒரு புதிய குரல் ஒரே அணியாக திரண்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது. '' என்று அமெரிக்காவை சேர்ந்த பாடகி மேரி மில்டன் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் தற்போது பெரிய அளவில் பேசும் பொருளாகி இருப்பது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் தான். நீட் வினாத்தாள் கசிவில் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்தனர். அதேபாணியில் தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய வைக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு கம்யூனிஸ்ட் உள்பட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேவேளையில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இந்த போராட்டத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் குழப்பம் ஏற்படுத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முயற்சிப்பதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு எங்கிருந்து பணம் வருகிறது? இதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் கரப்பான்பூச்சி கட்சிக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வழங்கப்படுவதாக பிரபல பாடகி மேரி மில்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க பாடகி மேரி பென் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: '' இந்தியாவில் உள்ள அனைத்து அழகான இளம் தேசபக்தர்களுக்கும் நான் எழுதி கொள்வது. இது மவுனமாக இருக்க வேண்டிய நேரம் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உங்களின் எதிர்காலத்துக்கு எதிராக உள்ள அமெரிக்க நன்கொடையாளர்கள் தான் அபிஜித் திப்கே மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு நிதியுதவி வழங்குகின்றனர். இளம் தேசப்பக்தர்களே பயப்படாதீர்கள். 25 ஆண்டுகளாக இந்தியாவிற்கு சேவை செய்து அதில் 3 முறை தொடர்ந்து பிரதமராகி 12 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பிரதமர் என்னுடைய (அமெரிக்கா) நாட்டில் இருந்து வரும் சீர்க்குலைக்கும் சக்திகளுக்கு பணியப்போவது இல்லை. இந்த அமெரிக்க நன்கொடையாளர்கள் குறிப்பிட்ட வழிமுறையை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் உலக தலைவர்களை குறிவைக்கின்றனர். இதற்காக அமெரிக்காவில் படித்த ஒருவரை உருவாக்கி குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்பி குழப்பத்தையும், அழிவையும் ஏற்படுத்த நிதியுதவி அளிக்கின்றனர். இத்தகை நபர்களில் யாரும் வெற்றி பெற்றது இல்லை. ஆனால் நாட்டின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்திய மண்ணில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற ஒரு புதிய குரல் எழுந்து ஒரே அணியாக திரண்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது. ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நிலைநிறுத்த எப்போதும் ஒரு எதிர் இயக்கம் இருக்க வேண்டும். எழுந்து நில்லுங்கள், இளம் தேசபக்தர்களே! எழுந்து நில்லுங்கள்!'' என்று கூறியுள்ளார். இந்த தகவலை கூறியுள்ள மீரா மில்பென் அமெரிக்காவின் பிரபல பாடகியாவார். அமெரிக்காவில் நடக்கும் இந்தியா சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் நம்முடைய தேசியக்கீதம் உள்பட நாட்டுப்பற்று பாடல்களை மேடைகளில் பாடி வருகிறார். அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுள்ளார். இவர் தனது சமூக வலைதளங்களில் நம் நாட்டுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்திய மக்கள், இந்தியாவின் கலாசாரம் எப்போதும் தனது மனதுக்கு நெருக்கமானவதாக உள்ளதாக அவர் அவ்வப்போது கூறி வருகிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் உலகளாவிய நாடுகளின் மே போர் நடவடிக்கையிலும் கூட இந்தியா திறம்பட செயல்படுவதாக கூறி சமீபத்தில் பிரதமர் மோடியை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்க்கது.டெல்லியில் இளைஞர்கள் கைது.. ஸ்டாலின் கண்டனம்.. திமுக சட்ட உதவி வழங்கவும் தயார்
தமிழ்நாட்டின் எஸ்ஐஆர்.. ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி ஸ்டாலின் தான்! ஆதவ் அர்ஜுனா அட்டாக்!
5 நாள் திகார் சிறையில் இருங்க.. கரப்பான்பூச்சி கட்சி சவ்ரவ் தாஸ் உள்பட 2 பேருக்கு கோர்ட் உத்தரவு