அபிஜித் தீப்கேவை வீட்டு வாசலிலேயே தூக்கிய போலீஸ்! வாகனத்தை தடுத்த கரப்பான்பூச்சிகள் - பரபரப்பு

  • டெல்லி: டெல்லியில் அறிவித்தபடி இன்று தேசியக்கொடி போராட்டத்தை முன்னின்றி நடத்த புறப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து அபிஜித் தீப்கே வெளியே வந்தபோது அங்கிருந்த போலீசார் அவரை குண்டுகட்டாக தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இன்று மாலை 5 மணிக்கு தேசியக்கொடி போராட்டத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்து இருந்தார்.

    Advertisement

    ஆனால் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதுதொடர்பாக இன்று டெல்லி போலீசார் அபிஜித் தீப்கேவிடம் தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவித்து நோட்டீஸ் வழங்கினர்.

    டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக அபிஜித் தீப்கே, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) செய்தி தொடர்பாளர் அனிஷ் கவாண்டி வீட்டில் தங்கியிருந்தார். அங்கு சென்று போலீசார் அபிஜித் தீப்கேவிடம் நோட்டீஸ் வழங்கினர். போராட்டம் நடத்த பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163ன் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு போராட்டம் நடத்த அனுமதியில்லை. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வார்னி்ங செய்திருந்தனர்.

    இந்த வார்னிங்கையும் தாண்டி அபிஜித் தீப்கே இன்று மாலை 5 மணியளவில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து தேசியக்கொடியுடன் வெளியே வந்தார். அவர் சாலைக்கு வந்தபோது போலீஸ் அதிகாரி அவரை தடுத்தார். அப்போது அவர், ''உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்கிறோம். கன்னோட் பிளேஸ் பகுதியில் சட்டப்பிரிவு 163 அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த தடை உள்ளது'' என்று கூறினார்.

    Advertisement

    ஆனால் அபிஜித் தீப்கே கேட்கவில்லை. தான் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை குண்டுகட்டாக கைது செய்து அருகே நிறுத்தப்பட்டு இருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றினார். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அங்கிருந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

    இருப்பினும் அங்கிருந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி அபிஜித் தீப்கேவை கைது செய்து அழைத்து சென்றனர்.

    English Summary

    Abhijeet Dipke, founder of the Cockroach Janta Party, was swiftly arrested by the police today as he set out to lead a protest involving the national flag-an action he had previously announced in Delhi. The incident, in which police officers physically lifted and carried him away as he emerged from the house where he was staying, caused a major stir.