பாஜகவை முந்தி டிரெண்ட்.. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனருக்கு நேர்ந்த கதி.. இன்ஸ்டாகிராமில் ‘ஆப்பு'

  • டெல்லி: நம் நாட்டில் பெரிய அளவில் பேசும் பொருளாக உள்ளது 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'. இதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தி்ல் 19 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்த நிலையில் அது முடக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தக்கட்டமாக 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜித் திப்கேவின் இன்ஸ்டாகிராம் பக்கமும் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புலம்ப தொடங்கி உள்ளார்.

    Advertisement

    சமூக வலைதளங்களில் தற்போது பேசும் பொருளாக இருக்கிறது 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta party). மகாராஷ்டிராவை சேர்ந்த அபிஜித் திப்கே என்பவர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தான் சமூக வலைதளங்களில் இந்த பக்கத்தை தொடங்கினார்.

    Advertisement

    இந்த பக்கத்தில் ஏராளமானவர்கள் இணைந்து வருகின்றனர். கடந்த 16ம் தேதி இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்ட இந்த பக்கத்தின் பாலோவர்ஸ் 19 மில்லியனை கடந்தது. இது பாஜக, காங்கிரஸ் கட்சியின் இன்ஸ்டாகிராம் பாலோவர்ஸ்களை விட அதிகம். குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வது விவாதத்தை கிளப்பியது.

    பாஜகவினர் அச்சம்

    மேலும் இது இயக்கமாக, இளைஞர்களை ஒருங்கிணைக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. பல நாடுகளில் இளைஞர்கள் சமூக வலைதளங்கள் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு அரசுக்கு எதிராக புரட்சி செய்து வருகின்றனர். இதனால் ஆளும் பாஜக ஆதரவாளர்கள் இதை நாட்டின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் என்று கூறினர்.

    Advertisement

    மேலும் பாகிஸ்தானின் ஐஎஸ் தொடர்பு, வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று கூறினர். இதையடுத்து உளவுத்துறை கண்காணிப்பிற்குள் வந்த இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இன்ஸ்டாகிராம் பக்கம் நம் நாட்டில் முடக்கம் செய்யப்பட்டது.

    நிறுவனரின் இன்ஸ்டா கணக்கும் போச்சி

    இந்நிலையில் தான் அபிஜித் திப்கேவின் தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதை அறிந்திருந்த அவர் 'பேக்-அப்' முறையில் இன்னொரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்திருந்தார். அந்த இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கம் செய்யப்பட்டது.

    இதுபற்றி அபிஜித் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், ''இது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் மீதான அடக்குமுறை. இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. எனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. பேக்அப் இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. இனி இந்த பக்கத்தில் வெளியாகும் பதிவுகளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பதிவாக யாரும் எடுத்து கொள்ள வேண்டாம்'' என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

    Advertisement

    'பேக்-அப்' அக்கவுண்ட் மீட்பு

    இருப்பினும் சிறிது நேரத்தில் அவரது 'பேக்-அப்' இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்டெடுக்கப்பட்டது. ஆனால் அவரது அதிகாரப்பூர்வ தனிப்பட்ட பயன்பாட்டுக்கான இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கியே வைக்கப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை அவர் மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இருப்பினும் தற்போது வரை அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவரால் மீட்டெடுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை அவர் மீட்டெடுகக முயற்சிக்கும்போதும், ''உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு உங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது. உங்களின் அடையாளத்தை சரிபார்த்து புதிய பாஸ்வேர்ட்டை பதிவேற்ற வேண்டும்'' என்று வந்துள்ளது. இதனால் அவர் பிற சமூக வலைதள பக்கங்களில் புலம்பி வருகிறார்.

    English Summary

    Cockroach Janta Party Founder: In our country, the 'Cockroach Janata Party' has become a major topic of conversation. Its official Instagram page-which boasted a following of over 19 million users-was disabled. Subsequently, in the next phase of this crackdown, the Instagram page of the 'Cockroach Janata Party' founder, Abhijeet Dipke, was also hacked.