இன்றே கடைசி.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு கெடு.. கரப்பான்பூச்சி கட்சி வார்னிங்

  • டெல்லி: 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்தது. இந்நிலையில் தான் இன்றைக்குள் தர்மேந்திர பிரதான் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் வரும் வாரத்தில் இந்தியா முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' தலைவர் அபிஜித் தீ்ப்கே மத்திய அரசுக்கு வார்னிங் செய்துள்ளார்.

    Advertisement

    நம் நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' மற்றும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிராக சிஜேபி எனும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை நடத்தியது. இதில் பிற கட்சிகளின் மாணவர்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    Advertisement

    'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நிறுவனராக இருக்கும் அபிஜித் தீப்கே பங்கேற்றார்.' இந்த போராட்டத்தின்போது தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களின் இல்லங்களை சுற்றி 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே மத்திய அரசுக்கு கடும் வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: ''மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்றைக்கும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டெல்லியில் மட்டும் நடக்கும் இந்த போராட்டம் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இந்த வாரத்திலேயே போராட்டம் முன்னெடுக்கப்படும். அதுமட்டுமின்றி டெல்லி ஜந்தர் மந்தரில் அடுத்த சனிக்கிழமையும் போராட்டம் நடத்தப்படும்.

    Advertisement

    மத்திய அ்மைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும். கடந்த 10-12 ஆண்டுகளில் ஹிந்து - முஸ்லிம் மத அரசியிலில் நம்மை சிக்க வைத்துள்ளனர். இது யாருக்காவது வேலையை கொடுக்குமா? இல்லாவிட்டால் யாருக்காவது வேறு வகையில் பலன் அளிக்குமா? இந்த பிரச்சனைக்காக நான் என்னை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.

    மேலும் அபிஜித் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், ''எனது பெற்றோரை பார்க்க வீட்டுக்கு சென்றேன். ஓராண்டுக்கு மேலாக அவர்களை பார்க்காமல் இருந்த நிலையில் நான் வீட்டுக்கு சென்னேறன். அப்போது அவர்கள் கடந்த 15 நாட்களாக அதிகமாக துன்பப்பட்டனர்.

    Advertisement

    மிரட்டல்கள் காரணமாக வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை இருந்தது. அவர்களை மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லப்போகிறேன. இன்றைய போராட்டம் ஒரு முன்னோட்டம் மட்டுமே. இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வருகை தந்ததற்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

    English Summary

    A massive protest was held today at Jantar Mantar in Delhi against Union Education Minister Dharmendra Pradhan by the ‘Cockroach Janata Party'. Amidst this, the party's leader, Abhijit Dipke, has warned the Central Government that Dharmendra Pradhan must resign from his ministerial post by the end of the day; otherwise, protests will erupt across India in the coming week.