5 நாள் திகார் சிறையில் இருங்க.. கரப்பான்பூச்சி கட்சி சவ்ரவ் தாஸ் உள்பட 2 பேருக்கு கோர்ட் உத்தரவு

  • டெல்லி: தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்த முயன்றதாக கரப்பான்பூச்சி கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இன்று காலையில் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை 5 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 10ம் தேதி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் வழியிலேயே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    Advertisement

    அதன்பிறகு கடந்த 11ம் தேதி 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்போது டெல்லி எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி 3 பேரும் அடுத்த ஓராண்டு வரை அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடாது எனக்கூறி ரூ.50 ஆயிரம் பாண்ட் எழுதி வாங்கி விடுவித்தார்.

    அபிஜித் தீப்கே வீட்டில் சோகம்.. கைதுக்கு நடுவே மகாராஷ்டிராவில் பாட்டி திடீர் மரணம்.. என்ன நடந்தது?

    இருப்பினும் கூட 2 நாட்களில் நேற்றைய தினம் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும்ஆகியோர் தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த செயல் என்பது அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தை மீறும் செயலாகும்.

    Advertisement

    இதனால் தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மட்டுமின்றி அவருடன் கைதாகி இருக்கும் அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோரை போலீசார் இன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று காலையில் 3 பேரும் டெல்லி மந்திர் மார்க்கில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

    அபிஜித் தீப்கே இனி போராட முடியுமா? ஓராண்டு அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த தடை.. கோர்ட் போட்ட கண்டிஷன்

    சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை நீதிமன்ற காவலில் 5 நாட்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் திகார் சிறைக்கு அழைத்து சென்றனர். சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் இதுவரை சிறை சென்றது இல்லை. போராட்டம் நடத்தி கைதாகி இருந்தாலும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதனால் இதுதான் அவர்களின் முதல் சிறையாகும்.

    Advertisement

    அதேவேளையில் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உடன் கைதான அஜிங்கியா ஷிண்டே விடுவிக்கப்பட்டார். அவரிடம் பாண்ட் பெறப்பட்டு நீதிபதி விடுவித்தார். இதுபற்றி அவர்களின் வழக்கறிஞர் அபிஷ்ட் ஹெலா கூறுகையில், ''2 பேரும் குற்றம் செய்வார்கள் என்ற அனுமானத்தில் அடிப்படையில் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி ஜந்தர் மந்தருக்கு வரும்படி மக்களிடம் அழைப்பு விடுத்ததாக அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அத்தகைய அழைப்பு ஒன்றையும் விடுக்கவில்லை. அவர்கள் பிணை பத்திரத்தை மீறவில்லை. கன்னாட் பிளேஸ் தொடர்பான தனிப்புகார் இங்கு தவறாக பயன்படுத்பப்ட்டுள்ளது. இதனால் தான் அவர்கள் 5 நாட்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

    English Summary

    Following the swift arrest of Saurav Das, Ashutosh Ranga, and Ajinkya Shinde—members of the 'Cockroach Party'—for attempting to stage a protest at Delhi's Jantar Mantar yesterday in defiance of a ban, reports indicate a strong likelihood that they will be lodged in Tihar Jail today rather than being released.