அடங்காத கரப்பான்பூச்சி கட்சியினர்.. டெல்லிக்குள் இனி நுழைவது எப்படி? அனைத்து ரயில்களையும் ரத்து செய்த மத்திய அரசு

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இந்த போராட்டத்தில் பங்கேற்க வருவோரை தடுக்க நாளை 10 மணிநேரம் டெல்லிக்கான அனைத்து ரயில்களை அதிரடியாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மும்பை, பெங்களூரில் இந்த போராட்டம் நடந்து முடிந்துள்ளது.

    Advertisement

    'SIR' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையில் தன்னிச்சைாக செயல்பட்டது மற்றும் அதில் ஏற்பட்ட குளறுபடிக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தை அறிவித்துள்ளது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. இந்த போராட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பணிகளில் மத்திய அரசும், டெல்லி அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    கண்ணாடிய திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும்? போராட்டத்தை தடுக்க டெல்லி போலீஸ் செய்யும் வேலையை பாருங்க!
    Advertisement

    இதன் ஒரு பகுதியாக நாளை டெல்லிக்கு வரும் அனைத்து ரயில்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை புதுடெல்லி ரயில் நிலையம் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்து ரயில்களின் சேவையும் ரத்து செய்ப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''மத்திய டெல்லியில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் காரணமாக நாளை அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுடெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலைய பகுதிகளை சுற்றிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்படும் என்று உளவுத்துறை தகவல்களும்,போக்குவரத்து துறையும் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இதனால் பொதுமக்கள் இடையூறை சந்திக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை ரயில்வே எடுத்துள்ளது. அதன்படி இன்று மதியம் 2 மணிக்கு மேல் புறப்பட்டு அக்டோபர் 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் நாளை மதியம் 2 மணி வரை புதுடெல்லி ரயில் நிலையம் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வரும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன'' என கூறப்பட்டுள்ளது.

    அதேபோல் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து இன்று டெல்லிக்கு புறப்பட வேண்டிய 2 ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டனர். அதன்படி ஹவுரா - நியூ டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12301), செல்டா - புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் (12313) என்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    Advertisement
    மத்திய அரசை பணிய வைத்தவர்.. அக்.,10 கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு ராகேஷ் தியாகத் ஆதரவு.. யார் இவர்

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நாளை ஜந்தரில் போராட்டம் நடத்தி உள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அந்த கட்சியை சேர்ந்தவர்கள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர். அதேபோல் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி அதனை திரும்ப பெற வைத்த பாரதிய கிஷான் யூனியன் என்ற விவசாய அமைப்பும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதனால் விவசாய அமைப்புகளும் டெல்லி நோக்கி நாளை படையெடுக்க வாய்ப்புள்ளது. இவர்களை தடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    English Summary

    Delhi Trains Cancelled: The 'Cockroach Janta Party' has announced a protest for tomorrow at Delhi's Jantar Mantar, demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. To prevent people from attending this protest, a sudden announcement has been made cancelling all trains bound for Delhi for a period of 10 hours tomorrow.