தொடரும் கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்.. மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தை தோல்வி.. என்ன நடந்தது?

  • டெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் மத்திய அரசு இடையே இன்று 2வது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் மொத்தம் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் 3யை மத்திய அரசு ஏற்ற நிலையில் 2 கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நாளை 3வது கட்ட பேச்சுவார்த்தை தொடர உள்ளது. இன்று நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? எந்தெந்த கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. எதுவெல்லாம் ஏற்கப்படவில்லை ? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் தர்மேந்திர பிரதானிடம் ராஜினாமா கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

    Advertisement

    போராட்டக்காரர்களை மத்திய அரசு சார்பில் அமைச்சர் ஜேபி நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் தான் இன்று 2வது கட்டமாக டெல்லியில் உள்ள அரசியலமைப்பு கிளப்பில் (Constitution Club) பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவ்ரவ் தாஸ், தேசிய செய்தி தொடர்பாளர் அசுடோஸ் ரங்கா ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா, மத்திய அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

    Advertisement

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேராட்டத்தை கைவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணிநேரம் வரை நடந்தும் உடன்பாடு எட்டப்படவில்லை. கரப்பான்பூச்சி கட்சி சார்பில் மொத்தம் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதில் 3 கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது. 2 கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

    அதன்படி நீட் குளறுபடியால் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது, போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கைவிடுவது, அதேபோல் போராட்டக்காரர்களை குறிவைத்து எதிர்க்காலத்தில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்பதை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கையை மத்திய அரசு ஏற்றது. ஆனால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வது மற்றும் கல்வி முறையில் 5 சீர்த்திருத்த அம்சங்களை ஏற்கவில்லை.

    Advertisement

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை பொறுத்தவரை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது தான் முக்கிய கோரிக்கை. அதனை மத்திய அரசு ஏற்காததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மேலும் இதுபற்றி நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதனால் நாளைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை பொறுத்தவரை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். ஆனால் தற்போது வரை மத்திய அரசு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து விடுவிக்கவில்லை. அதற்கு மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவும் இல்லை.

    Advertisement

    இதனால் உடன்பாடு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதுபற்றி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன தலைவரான அபிஜித் திப்கே அளித்த பேட்டியில், ''மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை தவிர நாங்கள் வேறு எதையும் ஏற்கமாட்டோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். எந்த காரணம் கொண்டும் போராட்டம் கைவிடப்படாது.

    இந்த போராட்டம் என்பது நாட்டின் இளைஞர்களுடையாக மாறி உள்ளது. மாறாக இந்த போராட்டம் அபிஜித் திப்கே அல்லது சோனம் வாங்சுக என்ற ஓருவருக்கு மட்டுமான போராட்டம் கிடையாது. அதேபோல் இந்த போராட்டம் எதிர்க்கட்சிகளுக்கானது இல்லை. இந்த போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால் அது தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைப்பது மட்டும் தான்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    The second round of talks between the Cockroach Janta Party and the Central Government is currently underway. Saurav Das, the party's Chief Spokesperson, and Ashutosh Ranga, its National Spokesperson, have traveled from Jantar Mantar to the Constitution Club in Delhi to conduct these discussions. Union Ministers J.P. Nadda and Jitendra Singh are participating in the talks on behalf of the Central Government.