தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. அடுத்த 3 டிமாண்ட்டை நிறைவேற்ற கூறும் கரப்பான்பூச்சி கட்சி! மீண்டும் போர்க்கொடி

  • டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 3 டிமாண்ட்டை நிறைவேற்றும்படி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது.

    Advertisement

    கரப்பான்பூச்சி கட்சி சார்பில் மத்திய அரசிடம் மொத்தம் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதில் முதல் கோரிக்கை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா. நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது என்று மொத்தம்3 கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியது.

    Advertisement

    இதில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா இன்று நடந்து விட்டது. ஆனால் நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது - எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, உள்ளிட்ட கோரிக்கைகள் பெண்டிங்கில் உள்ளது. இந்த 2 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

    தற்போது புதிதாக இன்னொரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்திய அதிவிரைவு படை மற்றும் டெல்லி போலீசார் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த பெண்டிங் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் போராட்டம் கைவிடப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே கூறியுள்ளார். இதுபற்றி அவர், ' 'யாரும் பயப்படவேண்டாம். இது ஜனநாயக நாடு. அவர் (தர்மேந்திர பிரதான்) ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் நம்முடைய இன்னும் கோரிக்கைகள் உள்ளன. இதனால் நாங்கள் இப்படியே போகமாட்டோம்.

    ஏனென்றால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கண்டிப்பாக கிடைக்க வேண்டும். அதேபோல் 20ம் தேதி காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவிக்கை எடுக்கப்பட வேண்டும். கரப்பான்பூச்சிகளுடன் விளையாடாதீர்கள்'' என்று மத்திய அரசுக்கு கடும் வார்னிங்கை கொடுத்துள்ளார்.

    English Summary

    Union Education Minister Dharmendra Pradhan resigned from his post today. While this was expected to bring an end to the protests at Delhi's Jantar Mantar, the 'Karappanpoochi Janata Party' has raised a banner of revolt against the central government, demanding the fulfillment of two further demands.