வணிக சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பு.. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பால் வணிகர்கள் அதிர்ச்சி

  • டெல்லி: சென்னையில் இன்று வணிக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலை ரூ.10.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.2,916.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரில் எந்த வித மாற்றமும் இல்லை. வணிக சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயர்ந்துள்ளது ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் நடத்தி வரும் வணிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    இந்தியாவில் மாதம் தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம்.

    Advertisement

    ஈரான் - அமெரிக்கா போரால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விநியோக நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து இல்லத்தரசிகளையும் வணிகர்களையும் அதிரவைத்தது. கடந்த மாதம் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக வணிக சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தது. இந்த நிலையில், இன்று வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.2,916.50 ஆக விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    Advertisement

    வீட்டு உபயோக சிலிண்டர் ரூ. 957.50 ஆக உள்ளது. வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்து இருப்பது ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் வணிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    English Summary

    The price of a commercial LPG cylinder in Chennai has increased by ₹10.50 today, bringing the selling price of the 19 kg cylinder to ₹2,916.50. Meanwhile, there is no change in the price of domestic LPG cylinders. This hike follows a ₹200 reduction in the price of commercial cylinders last month.