கரப்பான் பூச்சி கட்சி ஓரிரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.. அடித்து சொல்லும் ப.சிதம்பரம்

  • சென்னை: நாடு முழுக்க கல்வி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை வலியுறுத்தி கரப்பான் பூச்சி கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த கரப்பான் பூச்சி கட்சி அமைப்பு, எதிர்காலத்தில் ஓரிரு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி சார்பில் இப்போது நாடு முழுக்க பள்ளிகளை ஆய்வு செய்யும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் கிடைத்து வருகிறது. ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கரப்பான் பூச்சி கட்சியினர் தொடர்ந்து ஆய்வுகளை செய்து வருகிறார்கள்.

    Advertisement

    கரப்பான் பூச்சி கட்சி

    இதற்கிடையே கரப்பான் பூச்சி கட்சி தொடர்பாக சில முக்கிய கருத்துகளை முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்து யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், கரப்பான் பூச்சி கட்சி ஓரிரு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என அவர் குறிப்பிட்டார். அதேநேரம் நாடு முழுவதும் மூன்றாவது அரசியல் சக்தியாக உருவெடுக்குமா என்பதை இப்போது கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மூன்றாவது அணி

    கரப்பான் பூச்சி கட்சி தேசிய அளவில் மூன்றாவது அணியாக உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம், அந்த அமைப்பு பள்ளிகளை ஆய்வு செய்ய முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தை சுட்டிக்காட்டினார். அரசு பள்ளிகளின் மோசமான நிலை குறித்து இந்த இயக்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், இதன் தாக்கத்தால் ஆட்சியில் இருப்பவர்கள் விழித்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    Advertisement

    அரசு பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்குவது தொடர்பாக தற்போது அறிவிப்புகள் வெளியாகி வருவதாக குறிப்பிட்ட அவர், "ஒரு கல் வீசப்பட்டால் அது அலைகளை ஏற்படுத்தும் அல்லவா? அதுபோல தான்" என குறிப்பிட்டார். மேலும், இதற்கு உதாரணமாக அசாம் கண பரிஷத் கட்சியை சிதம்பரம் குறிப்பிட்டார். அசாம் மாணவர் சங்கமான AASU நடத்திய போராட்டங்களின் பின்னணியில் AGP உருவாகி, 1985ல் அசாமில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்ததை அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், நேபாளத்தில் Gen Z போராட்டத்தின் பின்னணியில் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சியின் தலைவர் பாலேந்திர ஷா பிரதமரானதையும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    நீட் முறைகேடு

    NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் முறைகேடு தொடர்பாக பேசிய சிதம்பரம், NTAவில் நிரந்தர ஊழியர்கள் குறைவாக இருக்கும் நிலையில், அவர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் தேர்வு நடத்துவதில் சிரமங்கள் உள்ளன. இது காரணமாகவே வினாத்தாள் லீக் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    கரப்பான் பூச்சி கட்சி

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது இந்தியாவில் இளைஞர்கள் இணைந்து உருவக்கிய ஒரு அமைப்பாகும். முதலில் ஒரு அரசியல் நையாண்டி இயக்கமாக உருவான இது, பிறகு அரசியல் இயக்கமாக பரிணமித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியதாக சொல்லி சில கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அதை மையமாக வைத்தே இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் Gen-Z தலைமுறை இளைஞர்கள் பல லட்சம் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.

    Advertisement

    தொடக்கத்தில் சமூக வலைத்தள பக்கங்களில் மீம்கள் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய இந்த இயக்கம், பின்னர் களப் போராட்டங்களிலும் தீவிரமாக இறங்கியது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய 37 நாட்கள் தொடர் போராட்டம் தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது. இதனால் அப்போது கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதானும் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former Union Minister P. Chidambaram said the Cockroach Janta Party could potentially capture power in one or two states(கரப்பான் பூச்சி கட்சி குறித்து சிதம்பரம்): Chidambaram on Cockroach Janta Party latest news in tamil.