பிரதமர் மோடியின் தந்தையை இழிவுபடுத்தி பேசினாரா கார்கே? கொந்தளித்த பாஜக.. சீனுக்குள் வந்த அமித்ஷா

  • பாட்னா: பீகாரில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு பிரதமர் மோடியையும், அவரது மறைந்த தந்தையையும் மட்டுமின்றி நாட்டையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக பாஜக வரிந்து கட்டியுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் கார்கேவை கடுமையாக சாடியுள்ளனர்.

    Advertisement

    பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ கிருஷ்ண சிங்கின் 139 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசினார். இதில் கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

    Advertisement

    திருப்பி திருப்பி கூறிய கார்கே

    அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த ஒருவர் மேடைக்கு கீழே நின்று, பிரதமர் மோடி போக மாட்டார் (ஆட்சியை விட்டு) என்று கூறினார். இதனைக்கேட்டு கோபம் அடைந்த மல்லிகார்ஜுன கார்கே, மோடியின் தந்தை கூட போய்விடுவார் என்று கூறினார். இந்த வார்த்தையை கார்கே மூன்று முறை திருப்பி திருப்பி கூறினார். இதையடுத்து, கார்கேவை நோக்கி பேசிய சந்தோஷ்குமார் என்ற நபரை பிடித்து காங்கிரஸ் கட்சியினர் அடித்து வெளியே விரட்டினர்.

    6 நாளில் காலி செய்யணும்.. பிரதமர் இல்லம் அருகே உள்ள மசூதிக்கு நோட்டீஸ்.. தண்ணீர் – மின்சாரம் 'கட்’
    Advertisement

    இதற்கு மத்தியில், மோடியின் தந்தையும் கூட போய்விடுவார் என்று கார்கே பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சியையும், கார்கேவையும் கடுமையாக விமர்சித்துள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை மட்டும் இழிவுபடுத்தவில்லை. மறைந்த அவரது தந்தையும் இழிவு படுத்தியிருக்கிறார். தேசத்தையும் இழிவுபடுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

    வரம்புகளை மீறிவிட்டார் - அமித்ஷா

    உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவும் இது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவை விமர்சித்துள்ளார்.. அமித்ஷா கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சி அரசியல் கண்ணியத்தை கைவிட்டுவிட்டு விட்டது. பிரதமர் மோடி குறித்தும் அவரது குடும்பம் பற்றியும் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது. மோடியின் தந்தையைப் பற்றி அநாகரிகமான கருத்தைத் தெரிவித்ததன் மூலம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டார்.

    Advertisement

    நிதின் நபினும் கண்டனம்

    12 ஆண்டுகளாக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருவதால், காங்கிரஸ் கட்சி விரக்தி மற்றும் அதிருப்தியில் உள்ளது. அந்த கட்சிக்கு எந்த ஒரு கொள்கையும் இல்லை. அவதூறு அரசியல் மட்டுமே எஞ்சியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபினும் கார்கே கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நிதின் நபின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    மோடி, அமித் ஷாவுக்கு விஜய் வாழ்த்து.. ராகுலை ஏற்க மறுப்பதா? தவெக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல்!

    அரசியலில் எதிர்க்கருத்துகளுக்கு ஒரு வரைமுறை உள்ளது. ராகுல் காந்தியும் பிற எதிர்க்கட்சி தலைவர்களும் தலைவர்களின் குடும்பத்தினரை அரசியல் பேச்சுகளில் இழுத்து பேசுகிறார்கள். இது கார்கேவின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல.. ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியிடமும் நாகரிகம் இல்லை என்பதன் வெளிப்பாடாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Congress: At an event held in Bihar, remarks made by Congress president Mallikarjun Kharge regarding Prime Minister Narendra Modi have sparked a controversy. The BJP has strongly alleged that Kharge’s comments are insulting not only to Prime Minister Modi and his late father but also to the nation itself. Union Home Minister Amit Shah and BJP national leader Nitin Nabin have launched a sharp attack on Kharge.