உத்தர பிரதேசம் - பஞ்சாப் தலைவர் அதிரடி மாற்றம்.. யார் இவர்கள்? தேர்தலுக்கு முன் காங்., பெரிய ஆபரேஷன்

  • டெல்லி: உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ள நிலையில் இருமாநிலங்களுக்கான காங்கிரஸ் தலைவர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவராக ஆராதனா மிஸ்ராவும், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் இந்திய முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டன் பர்கத் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அதேபோல் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இந்த 2 மாநிலங்களிலும் இழந்த செல்வாக்கை மீட்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

    Advertisement

    இதற்கிடையே தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 4 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.

    இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி இருமாநிலங்களிலும் தங்களின் மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

    அதன்படி உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த அஜய் ராய் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் பொறுப்பு பெண் நிர்வாகிக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைவராக ஆராதனா மிஸ்ரா மோனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    இவருக்கு வயது 52. ராம்பூர் காஸ் தொகுதியில் 3வது முறையாக எம்எல்ஏவாக உள்ளார். வர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் குழு தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    இவர் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். பாஜகவிற்கு பிராமணர்கள் ஓட்டளிக்கும் நிலையில் அதனை தங்கள் வசமாக்க காங்கிரஸ் இவரை இந்த பொறுப்பில் நியமனம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி கிழக்கு உத்தர பிரதேச பகுதிகளில் ஆராதானா மிஸ்ராவிற்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

    அதேபோல் உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது பெயர் இம்ரான் மசூத். இவர் சாஹரன்பூர் தொகுதியின் எம்பியாக உள்ளார். இவவருக்கு மேற்கு உத்தர பிரதேசத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவர்கள் தவிர தேவிந்தர் நிசாத் மற்றும் அலோக் பிரசாத் ஆகியோரின் உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் மூத்த துணை தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் உத்தர பிரதேச காங்கிரஸ் குழு தலைவராக சவுத்ரி வீரேந்தர் சிங்கை தேர்வு செய்துள்ளது.

    Advertisement

    அதேபோல் பஞ்சாப் மாநில தலைவராக இருந்த அமரிந்த் சிங் ராஜா வாரிங் மாற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் மாநில தலைவராக செயல்பட்டு வந்தார். அவருக்கு பதில் புதிய ததலைவராக முன்னாள் ஒலிம்பிக் வீரரும், இந்திய ஹாக்கி அணியின் மாஜி கேப்டனுமான பர்கத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜலந்தர் கண்டோன்மெண்ட் சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் அவர் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினர். கடந்த 10 ஆண்டுகளாக பஞ்சாப்பில் ஆக்டிவ் அரசியலில் உள்ளார்.

    Advertisement

    2012 சட்டசபை தேர்தலில் ஜலந்தர் கண்டோன்மெண்ட் சட்டசபை தொகுதியில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் சார்பில் 2017, 2021 சட்டசபை தேர்தல்களில் வென்றார். பிறகு 2021 செப்டம்பர் முதல் 2022 மார்ச் மாதம் வரை பஞ்சாப்பில் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் பள்ளி கல்வி, உயர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் அமைச்சராக செயல்பட்டார். தற்போது காங்கிரஸ் மாநில தலைவராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Uttar Pradesh Congress President: Assembly elections are scheduled to be held in Uttar Pradesh and Punjab next February. With only four months remaining until the polls, there have been sudden leadership changes for the Congress party in both states. Aradhana Mishra has been appointed as the Uttar Pradesh Congress chief, while former Indian hockey team captain Pargat Singh has been named the Punjab Congress chief. Interesting details regarding their backgrounds have since emerged.