“போலீஸ் வேனுக்குள் என் கழுத்தை நெரித்து CRPF வீரர்கள் தாக்கினர்”.. MP ஜான் பிரிட்டாஸ் குற்றச்சாட்டு!

  • டெல்லி: தான் ஒரு எம்.பி எனத் தெரிவித்தும் CRPF வீரர்களால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் கேரள சிபிஐஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ். போலீஸ் வாகனத்திற்குள் தனது கழுத்தை நெரித்து CRPF வீரர்கள் தாக்கியதாகவும் ஜான் பிரிட்டாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கரப்பான்பூச்சி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை எம்.பி ஜான் பிரிட்டாஸ், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், சிபிஐஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் உள்ளிட்ட சிபிஐஎம் மூத்த தலைவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிபிஐம் எம்.பி ஜான் பிரிட்டாஸ், சிஆர்பிஎஃப் வீரர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடுமையாக தாக்குதலுக்கு உள்ளான ஜான் பிரிட்டாஸ் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    "நான் ஒரு எம்.பி என்று சொல்லியும், என்னை இழுத்துச் சென்று போலீஸ் வாகனத்திற்குள் வைத்து என் கழுத்தை நெரித்து தாக்கினர்" என CRPF வீரர்கள் மீது கேரள சிபிஐஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    போலீஸ் வாகனத்திற்குள் என்னை இருக்கையோடு சேர்த்து அழுத்திப் பிடித்து, என் கழுத்தை நெரிக்க முயன்றனர். இந்த நாட்டில் ஒரு எம்.பிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் கதி என்ன? என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    தன் கழுத்தை நெரித்து தாக்கியதில் மூச்சுவிட சிரமப்பட்ட தன்னை காவல் கட்டுப்பாட்டு அறையைச் சேர்ந்த ஒரு டிசிபி நடந்ததைப் பார்த்துவிட்டு, பேருந்தில் இருந்த காவல்துறை அதிகாரிகளை அழைத்து, தான் ஒரு எம்.பி என்பதால் என்னை விடுமாறு கூறியதாகவும், அதன் பிறகு போலீசார் பேருந்தில் இருந்து வெளியே தள்ளி ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டனர் என்றும் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்துள்ளார்.

    English Summary

    CPIM Rajya Sabha MP John Brittas alleged that he was brutally manhandled by the Delhi police and CRPF personnel while on his way to take part in the protest called by CJP at Jantar Mantar.