டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் சில்லறை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு முக்கியமான பதிலை கொடுத்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த போர் இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. போர் தொடங்கிய காலத்தில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் அது ஒரு கட்டத்தில் 110 டாலரை தாண்டி வர்த்தகமானது.
ஆனால், போர் பதற்றம் குறைந்த பிறகு கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி இதற்கான பதிலை அளித்தார். அதாவது மத்திய அரசால் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்ய முடியாது என்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மார்கெட் நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதாகக் கூறினார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை. 2026 பிப்ரவரியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 69 டாலராக இருந்தது. அமெரிக்கா இஸ்ரேல் போர் காரணமாக மார்ச் மாதத்தில் இது 136.68 டாலராக உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலை இந்தளவுக்கு உயர்ந்த போதும் முதலில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடந்த சூழலில், அது முடியும் வரை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதன் பிறகும் கூட மிக குறைந்த அளவிலேயே பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அந்ததளவுக்கு உயர்த்தப்படவில்லை. இதனால் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.2,662 கோடி இழப்பையும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ரூ.3,962 கோடி இழப்பையும் சந்தித்தன. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இழப்பு ரூ.11,526 கோடியாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் வகையில், மார்ச் 2026ல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் அரசின் வரி வருவாயிலும் கணிசமான பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது சென்னையில் பெட்ரோல் ரூ.107.77, டீசல் ரூ.99.55 ஆகவும், பெங்களூரில் பெட்ரோல் ரூ.111.68, டீசல் ரூ.99.56 ஆகவும் உள்ளது. இப்போது கச்சா எண்ணெய் விலை 83 டாலராக இருக்கிறது. இது போருக்கு முந்தைய விலையை காட்டிலும் அதிகம் என்றாலும் கூட போர் உச்சத்தில் இருந்த விலையை விட குறைவாகவும். இதை குறிப்பிட்டே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது பெட்ரோல்- டீசல் விலை மார்கெட் நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்தப்படாததால் இப்போது குறைக்க வாய்ப்பு இல்லை என்பதே ஆளும் தரப்பின் பதிலாக இருக்கிறது.பெட்ரோல்- டீசல்
என்ன நடந்தது!
மத்திய அரசு
பதில் என்ன