கர்நாடகாவுக்கு சாதகமாக போன காவிரி ஆணையம்.. எந்த உத்தரவும் இல்லை! வறட்சியில் தவிக்கும் தமிழகம்!

  • டெல்லி: தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்பது குறித்து நேற்று நடந்த காவிரி ஆணைய கூட்டத்தில், ஆணையம் எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை. இது கர்நாடகாவுக்கு சாதகமானதாக மாறியிருக்கிறது.

    Advertisement

    தமிழகத்திற்கு ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை 28.3 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பருவமழையை காரணம் காட்டி கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முழுமையான வறட்சியை எதிர்கொண்டிருக்கின்றன.

    Advertisement

    மேலாண்மை ஆணைய கூட்டம்

    இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேற்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கூடியது. இதில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்றிருந்த அதிகாரிகள், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி 28.3 டிஎம்சி தண்ணீரை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். கர்நாடகா ஜூன் 1 முதல் ஜூலை 19 வரை வெறும் 3.4 டிஎம்சி அளவு மட்டுமே தண்ணீரை கொடுத்திருக்கிறது. இன்னும் 24.8 டிஎம்சி அளவுக்கு தண்ணீரை திறந்து விட வேண்டி இருக்கிறது.

    தமிழகத்தின் வாதம்

    கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி என 4 முக்கிய அணைகளின் மொத்த கொள்ளளவு 114.57 டிஎம்சி ஆகும். இப்போதைக்கு 48.9 டிஎம்சி அளவுக்கு போதுமான நீர் இருப்பு இருக்கிறது. ஆனாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே உடனே தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழகத்தின் அதிகாரிகள் வாதங்களை முன் வைத்திருந்தனர்.

    Advertisement

    கர்நாடகா மறுப்பு

    ஆனால், கர்நாடாக தண்ணீர் திறக்க மறுத்துள்ளது. 48.9 டிஎம்சி என்பது மொத்த கொள்ளளவில் பாதி அளவுதான். நாங்களே பாதிதான் வைத்திருக்கிறோம். அதையும் உங்களுக்கு கொடுத்துவிட்டு என்ன செய்யுறது? என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர். பெங்களூர், மைசூர், மாண்டியா போன்ற மாவட்டங்களுக்கு குடிநீர் தேவைக்காகவும், அதை சுற்றியுள்ள கிராமங்களில் பாசனத்திற்காகவும் இந்த நீர் தேவைப்படுகிறது. இந்த முறை பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை எனவே, திறக்க முடியாது என்று கர்நாடகா கறாராக கூறியிருக்கிறது.

    ஏமாற்றிய ஆணையம்

    இந்த வாதங்களை கேட்ட காவிரி ஆணையம், வரும் நாட்களில் கனமழைக்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. எனவே கிடைக்கும் நீரை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மட்டுமல்லாது நீரை திறக்க வேண்டும் கர்நாடாகவுக்கு என்று எந்த உத்தரவையும் கொடுக்கவில்லை. மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து ஜூலை 28ம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறது. இதனால் கர்நாடகா தற்காலிக நிம்மதியடைந்திருக்கிறது.

    English Summary

    Cauvery Water: The Cauvery Authority did not issue any order regarding the immediate release of water due to Tamil Nadu during the meeting held yesterday. This has turned out to be favorable for Karnataka.