டெல்லி: இந்த காலகட்டத்தில் எல்லாமே சைபர் ஸ்பேஸில் தான், அதாவது இணையத்தில் தான் நடக்கிறது. ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் இணையத்தில் நாம் கனவிலும் யோசிக்காத பல விஷயங்கள் நடந்துவிட்டன. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
உலகமெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் சைபர் பாதுகாப்பு தொடர்பாக பல விஷயங்கள் நடந்துள்ளன. ஒரு பக்கம் இணையதளங்களை இயக்க உதவும் PHP கோடிங் மொழியில் இரண்டு முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் இந்தியாவின் eMudhra நிறுவனம் இணையதளங்களுக்கான டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்க பயன்படுத்திய செக்யூரிட்டி கீக்களும் மிகவும் பலவீனமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இதுதவிர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிறுவனங்களின் கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவும் முயற்சிகள், வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசியும் அபாயம் என அடுத்தடுத்து பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதன் காரணமாக அரசு இணையதளங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்களின் டேட்டா ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைப்பிடிக்கப்படும் அக்டோபரிலேயே இத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. இணையப் பாதுகாப்பு துறையில் தற்போது முக்கிய பிரச்சினையாக இருப்பது PHP கோடிங் லாங்குவேஜ்ஜில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகள். PHP2Shell என அழைக்கப்படும் இந்த குறைபாடுகளை பயன்படுத்தி, எந்தவிதமான அங்கீகாரமும் இல்லாமலேயே வெப் சர்வர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் சுமார் 70 சதவீத இணையதளங்கள் PHPஐ பயன்படுத்துகின்றன. அப்படிப்பட்ட ஒன்றிலேயே இந்த குறைபாடு இருக்கிறது. அதிலும் இந்த சிக்கலுக்கு 10க்கு 9.2 என்ற தீவிரத்தன்மை மார்க் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒன்று என்பதால் உடனடியாக பாதுகாப்பு அப்டேட்டை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக அப்டேட் வழங்க முடியவில்லை என்றால் அதுவரை சம்பந்தப்பட்ட இணையதளங்களை முடக்கி வைக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளன. இந்த குறைபாடுகள் சுமார் 10 ஆண்டுகளாக கண்டறியப்படாமல் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நேற்று அக்டோபர் 21ஆம் தேதி தான் இது தொடர்பாக உடனடி செக்யூரிட்டி அப்டேட்டை PHP Foundation வெளியிட்டது. முன்னெச்சரிக்கையாக ஃபின்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் சில அரசு இணையதளங்களும் முடக்கப்பட்டன. இது ஒரு பக்கம் இருக்க.. இந்தியாவை சேர்ந்த டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் நிறுவனமான eMudhra, இடைநிலை சான்றிதழ்களை வழங்குவதற்கு பயன்படுத்திய தனிப்பட்ட செக்யூரிட்டி கீக்கள் மிகவும் பலவீனமாக இருந்தது தெரிய வந்துள்ளது. நாம் இணையத்தை யூஸ் செய்யும்போது பிரவசரில் பூட்டு போல ஒரு சின்ன ஐகான் தென்படும். இது அந்த இணையதளம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும். அதற்கு தான் டிஜிட்டல் சான்றிதழ்கள் உதவுகின்றன. இந்த கீ தவறான நபர்களிடம் கிடைத்தால், போலி சான்றிதழ்களை உருவாக்கி உண்மையான இணையதளங்களை போல போலி இணையதளங்களை உருவாக்க முடியும். கடந்த அக்டோபர் 17ஆம் தேதி Wayne என்ற பாதுகாப்பு ஆய்வாளர் இந்த பிரச்சினை குறித்து முதலில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்தார். செக்யூரிட்டி கீக்களை தன்னால் கண்டறிய முடிந்ததை நிரூபிக்கும் வகையில், போலி இணையதளங்களை உருவாக்கி அதற்கு செக்யூரிட்டி கீயையும் உருவாக்கி காட்டினார். பொதுவாக செக்யூரிட்டி கீக்களுக்கு சுமார் 384 பிட் அளவிலான கீ இருக்க வேண்டும். ஆனால், eMudhraவின் கீக்களுக்கு வெறும் ஒரு பைட் நம்பர்களே இருந்தன. அதுவே சிக்கலுக்கு காரணம். இதையடுத்து அவசர அவசரமாக நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீனாவை சேர்ந்ததாக கருதப்படும் Storm-0940 என்ற ஹேக்கிங் குழு, AI கருவியை பயன்படுத்தி உலகம் முழுவதும் பல நூறு நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. ஏஐ உதவி இருப்பதால் சில கிளவுட் நெட்வொர்க்குகளுக்குள் வெறும் 3 மணி நேரத்தில் ஊடுருவ முடிவதாக கூறப்படுகிறது. இது தவிரவும் கூட பல ஹேக்கிங் முயற்சிகள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் தனித்தனியாக நடந்தாலும், சமீப நாட்களில் சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்து பூதாகரமாக வெடித்து வருகிறது.. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களுடன் தொடர்புடைய டேட்டாவும் கூட சமீபத்தில் தான் லீக் ஆகியிருந்தது. இப்படி பல தகவல்களை நாம் லிஸ்ட் போட முடியும். குறிப்பாக ஏஐ வந்த பிறகு ஐடி சர்வீஸ் மட்டும் ஈஸியாகவில்லை. மாறாக ஹேக்கிங்கும் கூட ஈஸியாகிவிட்டது என்பதே கசப்பான உண்மை.சைபர் பாதுகாப்பு
முதல் சிக்கல்
இரண்டாவது சிக்கல்
Finance with ஹரிஷ் தற்கொலை! சைபர் புல்லியிங் காரணமா? செபியின் 'சுதர்ஷன் AI' கெடுபிடியா? உண்மை என்ன?
சீன ஹேக்கிங் குழு