பொதுத் தேர்வுகள் சட்ட திருத்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம்! மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளி?

  • டெல்லி: நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளை தடுக்க மக்களவையில் பொதுத் தேர்வுகள் சட்ட திருத்த மசோதா நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

    Advertisement

    எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில்மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், மசோதாவை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டாம் கட்டமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது.

    Advertisement

    நீட் வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த ஜூலை 20 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் நோக்கி பேரமி வந்த மாணவர்களின் மீது தாக்குதல் குறித்து உடனே விவாதிக்க இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டிருந்தன.

    இதைத் தொடர்ந்து இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து மதியம் 12 மணிக்கு மீண்டும் இரு அவைகளும் கூடியன. மக்களவை மீண்டும் கூடியதுமே பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா 2026-ஐ மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.

    வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் விதமாக சட்ட விதிகமுறைகளை கடுமையாக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    வினாத்தாள் கசிவு, தேர்வு தொடர்பான மோசடிகளில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. முறைகேட்டின் தீவிரத்தை பொருத்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்படும்.

    திட்டமிட்டு இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை, 10 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேல்முறையீடு வழக்குகள் 3 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.

    தவறு செய்யும் நிறுவனங்கள் பொதுத் தேர்வுகளை நடத்த விதிக்கப்படும் தடை காலம் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படும் உள்ளிட்ட அம்சங்கள் மசோதாவில் உள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் மீது ஜந்தர் மந்தரில் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், மத்திய அரசு பதிலளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    அமளிக்கு இடையே இரு அவைகளிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அமளி ஏற்பட்டதால் நேற்றைய தினம் அவைகள் ஒத்திவைக்கப்டப்ட நிலையில் இன்றைய தினம் அதன் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

    English Summary

    Discussion against Anti paper leak bill on exam reforms today at Loksabha as yesterday ruckus at both the houses.