டெல்லி: டெல்லியின் காஷ்மீரி கேட் பகுதியில் ஓடும் ஸ்லீப்பர் சொகுசு பேருந்திற்குள், 11-ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்கச் சென்ற சிறுமி, ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு பலத்த மழை காரணமாகத் தவறுதலாக டெல்லியின் 'பரி சவுக்' பகுதியில் இறங்கி உள்ளார்.
அப்போது அங்கிருந்த காலியான ஸ்லீப்பர் பேருந்தைச் சிறுமி நிறுத்த முற்பட்டபோது, ஓட்டுநர் குல்தீப் மற்றும் நடத்துநர் சந்தீப் ஆகியோர் அவரைப் பேருந்தில் ஏற்றிக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து அந்தப் பேருந்தைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அதே போல டிரைவர் மற்றும் நடத்துநரை கைது செய்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2012 டிசம்பர் 16ம் தேதி இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. 23 வயது மருத்துவ மாணவி தனது நண்பருடன் முனிர்கா பகுதியில் ஒரு தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்திலிருந்த ஓட்டுநர் உட்பட 6 பேர் கொண்ட கும்பல், ஓடும் பேருந்திலேயே அம்மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அத்துடன் பிறப்பு உறுப்பில் கொடூரமான முறையில் ராடை வைத்து தாக்கியநு. அத்துடன் சாலையில் வீசிச் சென்றது அந்த மிருக கும்பல். இதில் அந்த சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் போராட்டங்களை உருவாக்கிய இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், இருவரும் அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டல் விடுத்து காஷ்மீரி கேட் பகுதிக்கு அருகே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.நிர்பயா வழக்கு: