டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றும் போது காவலர் ஒருவர், மாணவரின் முகத்தில் குத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. மாணவர்கள், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்காமல், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் வன்முறையில் காவல்துறையினர் ஈடுபடுவது தவறு என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருக்கின்றனர்.
இந்தியா தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 3 ஆணையர்கள். ஒருவர் தலைமை ஆணையர். அவர்தான் ஞானேஷ் குமார். இது தவிர 2 ஆணையர்கள் இருக்கின்றனர். ஒருவர் விவேக் ஜோஷி இன்னொருவர் சுக்பீர் சிங் சாந்து. என்னதான் தலைமை ஆணையராக இருந்தாலும்.. ஞானேஷ் குமார் தனியாக முடிவெடுக்க முடியாது. ஆனால், SIR விஷயத்தில் ஞானேஷ் குமார் தனியாக முடிவெடுத்திருக்கிறார். இதை எதிர்த்து 2 ஆணையர்களும் ஆட்சேபனை தெரிவித்திருக்கின்றனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியிருக்கின்றன. இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், AISF, SFI, NSUI மாணவர் அமைப்புகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக ஜந்தர் மந்தரில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700க்கும் அதிகமானோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மாணவர்களை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றும் போது, டெல்லி காவலர் ஒருவர் மாணவரின் முகத்தில் பஞ்ச் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார் எனில் அவர்களின் கோரிக்கையை கேட்க வேண்டும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் இதை எதையும் பின்பற்றவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.போராட்டம் ஏன்?