கண்ணாடிய திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும்? போராட்டத்தை தடுக்க டெல்லி போலீஸ் செய்யும் வேலையை பாருங்க!

  • டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி, டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் போராட்டங்களை தடுக்க காவல்துறை மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் விவாதங்களை கிளப்பி இருக்கின்றன.

    Advertisement

    டெல்லி போராட்டம் என்றாலே மத்திய அரசுக்கு கிலி தான். விவசாயிகள் போராட்டமாக இருந்தாலும் சரி, சமீபத்தில் நடந்த தர்மேந்திர பிரதானுக்கு எதிரான போராட்டகமாக இருந்தாலும் சரி.. டெல்லி போராட்டம் என்றால் மத்திய அரசுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். இப்படி இருக்கையில்தான் தற்போது ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் பீக் லெவலை எட்டியிருக்கிறது.

    Advertisement

    மாணவர்களின் போராட்டம்

    SFI, AISF, DYFI என இடதுசாரிகள் மாணவர், இளைஞர் அமைப்புகளால் டெல்லி போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. இதை மேலும் பூஸ்ட் செய்யும் விதமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தி உட்பட பல முக்கிய தலைவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். நேற்றும் இன்றும் டெல்லி போலீஸை எதிர்க்கட்சி தலைவர்கள் தண்ணீர் குடிக்க வைத்திருக்கிறார்கள். என்னதான போலீஸ் திரும்ப திரும்ப கைது செய்தாலும், விடாப்பிடியாக எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர்.

    இது போதாது என்று அக்.10ம் தேதி காக்ரோச் ஜனதா கட்சி நேரடியாக போராட்டத்தில் இறங்குவதாக அறிவித்திருக்கிறது. எனவே போராட்டத்தை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது. இந்த முயற்சிகள்தான் விவாதங்களை கிளப்பி இருக்கிறது.

    Advertisement

    சீரியஸாக இறங்கிய டெல்லி போலீஸ்

    அதாவது ஏற்கெனவே ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 2,873 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அவர்களை டெல்லி போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது. இதற்காக எஃப் ஆர் எஸ் தொழில்நுட்பத்தை காவல் துறை பயன்படுத்தி இருப்பது தான் இதில் ஹைலைட். எந்த 2,873 பேரும் அந்தந்த உள்ளூர் காவல் நிலையங்களில் நேரடி கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்கள் அக்டோபர் 10ஆம் தேதி போராட்டத்திற்கான டெல்லி எல்லையை நோக்கி வருகிறார்களா? என்பது தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    போராட்டக்காரர்களை அடையாளம் காண.. டெல்லி போலீஸ் எடுக்கும் புது முயற்சி! உளவு பார்க்கிறதா அரசு?
    Advertisement

    போக்குவரத்து பிளாக்

    அக்டோபர் 1ஆம் தேதி முதல், மத்திய காவல் படையின் 20 கம்பெனி பாதுகாப்பு படையினர் டெல்லி மற்றும் ஜந்தர் மந்தர் பகுதியில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். புதுடெல்லி மண்டலம் முழுவதும் கிட்டதட்ட 4,000 பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்து மற்றும் பேரிகார்டு அமைக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்

    இதுபோக காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. டெல்லிக்கு போராட்டக்காரர்கள் வருவதை தடுக்கும் நோக்கில் டெல்லி பயணத்திற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வருகிறது என்று தொண்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா

    டெல்லி காவல்துறை மாணவர் போராட்டத்தை தடுக்க பிஜி ஹாஸ்டல் உரிமையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக தலைவர்களுக்கு சில முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. டெல்லியில் மாணவர்கள் அதிகமாக தங்கி இருக்கும் முக்கிய பகுதிகளில் உள்ள பிஜி ஹாஸ்டல் உரிமையாளர்களை நேரில் தொடர்பு கொண்டு பேசுமாறு அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜெம் வீரமணி வழக்கு: “போலீஸ் அதிகாரிகளின் பங்கு குறித்து SIT விசாரித்து வருகிறது”.. ஐகோர்ட்டில் தகவல்

    சீப்பை ஒளிச்சி வைக்கும் கதை

    அக்டோபர் 10ம் தேதி போராட்டத்திற்கு மாணவர்கள் யாரும் செல்லக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுரை கூறி தடுத்து நிறுத்துமாறு பிஜி உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இதே போல தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்களையும் போலீசார் அணுகியுள்ளனர். கல்லூரி மாணவர்கள், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    Advertisement

    இதையெல்லாம் பார்க்கும்போது.. கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் என்கிற கதையாக இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.

    English Summary

    Amidst intensifying protests in Delhi demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar, the police's efforts to curb the demonstrations have sparked debate.