கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய பாஜக.. CJP தலைவர்களை மொத்தமாக விடுவித்த நீதிபதி!

  • டெல்லி: ஜந்தர் மந்தரில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைவர்கள் அபிஜித் தீப்கே உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் CJP தலைவர்கள் அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    Advertisement

    CJP தலைவர்கள் இன்று டெல்லியின் நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார்.

    Advertisement

    டெல்லியில் போர் பதற்றம் மாதிரியான சூழல்

    நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தை தடுக்க, டெல்லி காவல்துறையினரும், மத்திய ஆயுத காவல் படையினரும் என 40,000க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டதாக தி ஸ்டேட்மென்ட் பத்திரிகை ஊடகம் தெரிவித்திருந்தது. அதேபோல, சாலைகளில் இரும்பு தடுப்புகள், ஆணி பட்டைகள், வாகன சோதனை, ட்ரோன் கண்காணிப்பு என டெல்லி முழுவதும் போர்க்களம் போல காட்சியளித்ததாக போராட்டக்காரர்கள் கூறியிருந்தனர்.

    இதுபோக போராட்டக்காரர்கள் டெல்லிக்குள் வருவதை தடுக்க, வெள்ளிக்கிழமை இரவு முதல் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது. சனிக்கிழமை மதியம் 46 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக ஏஎன்ஐ நிறுவனம் கூறி இருக்கிறது. மேலும் 250க்கும் மேற்பட்ட ரயில்கள் டெல்லிக்குள் நுழைவழத மத்திய அரசு ரத்து செய்து இருந்தது.

    Advertisement

    போராட்டப்பகுதியை சுற்றி 4 கிலோமீட்டர் சுற்றளவில், சனிக்கிழமை இரவு வரை செல்போன் சிக்னல் முழுமையாக துண்டிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் அதிக அளவில் டெல்லிக்குள் குவிந்தனர். ஜந்தர் மந்தர் நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேற முயன்ற போது.. அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கங்க கைது செய்யப்பட்டனர். அதேபோல அபிஜித் டெல்லிக்குள் வந்து இறங்கியவுடன், விமானத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கரப்பான் ஜனதா கட்சித் தலைவர்கள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார்.

    English Summary

    CJP Leaders: Leaders of the Cockroach Janata Party (CJP), including Abhijit Deepke, had been arrested by the Delhi Police for staging a protest at Jantar Mantar without permission. The court has now ordered the release of all the CJP leaders.