ரூ.25,000 கோடி போயிடும்.. நவ.,1 ‘இந்தியா' கூட்டணி பேரணிக்கு டெல்லி வர்த்தகர் சபை கடும் எதிர்ப்பு! பின்னணி

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நவம்பர் 1ம் தேதி டெல்லியில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி அறிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு டெல்லி வர்த்தகர் சங்கம் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பேரணி நடந்தால் மொத்தம் ரூ.25 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படும், இதனால் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வைத்தல் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி தனது போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    Advertisement

    அதன்டி நவம்பர் 1ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி தலைமையில் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று டெல்லி டெல்லி வர்த்தகம் மற்றும் தொழில்சபை சார்பில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    ''நவம்பர் 1ம் தேதி ராம்லீலா மைதானத்தில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி தன்தேரஸ் மற்றும் நவம்பர் 8 ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் ராம்லீலா மைதானத்தின் அருகே உள்ள கடைகளில் வியாபாரங்கள் அதிகமாக நடக்கும்.

    Advertisement

    இப்படியான சூழலில் அங்கு பேரணி அறிவித்து இருப்பது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும். இதனால் சுமார் 20 முக்கிய சந்தைகளில் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் உள்ளது. கடந்த அக்டோபர் 10ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர், கன்னோட் பிளேஸ் உள்பட பல இடங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களால் சுமார் 2 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

    தீபாவளி நேரத்தில் மீண்டும் நவம்பர் 1ம் தேதி இத்தகைய இழப்புகள் வேண்டாம்.இதனால் தீபாவளி கூட்ட நெரிசல் மற்றும் வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பேரணியை ஒத்திவைக்க வேண்டும். இந்த பேரணியை நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு வைத்து கொள்ளலாம்'' என கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுபற்றி டெல்லி வர்த்தகம் மற்றுமு் தொழில்சபை தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ''டெல்லி வர்த்தகர்களுக்கு பண்டிகைக் கால விற்பனை மிகவும் முக்கியமானது. 'தன்தேராஸ்' பண்டிகையை ஒட்டி சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லி முழுவதும் தங்கம், வெள்ளி, நகைகள், மின்னணு சாதனங்கள், ஆடைகள், இனிப்புகள் மற்றும் பிற பண்டிகை காலப் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

    'இந்தியா' கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படும் நேரம் மட்டுமல்லை. அது நடைபெறும் இடமும் கவலையை ஏற்படுத்துகிறது. ராம்லீலா மைதானத்தை சுற்றி டெல்லியின் மிக முக்கியமான மொத்த மற்றும் சில்லரை வணிக சந்தைகள் உள்ளன.

    Advertisement

    இந்த இடத்தைச் சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 முக்கிய சந்தைகள் அமைந்துள்ளன. சந்தனி சௌக், சதார் பஜார், சாவ்ரி பஜார், காரி பாவ்லி, பகீரத் பேலஸ், காஷ்மீரி கேட், நயா பஜார், கரோல் பாக் மற்றும் லஜ்பத் ராய் சந்தை ஆகியவை இதில் அடங்கும்.

    போக்குவரத்து மாற்றங்கள், பேரிகார்ட் அமைத்தல், மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் சூழல் உள்ளிட்டவற்றால் மக்கள் கடைகளுக்கு வருவது தடுக்கப்படும். இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    The ‘INDIA' bloc alliance parties have announced a rally in Delhi for November 1st, demanding the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar. The Delhi Traders' Association has unexpectedly opposed this rally and has written a letter to Rahul Gandhi requesting that it be postponed.