கரப்பான்பூச்சி கட்சி பேரணியில் வன்முறை.. என்ஐஏ விசாரணை கோரிய இந்து அமைப்பு.. ஹைகோர்ட் உத்தரவு

  • டெல்லி: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள். அன்றைய தினம் நடந்த பேரணியில் பொதுச்சொத்துகளும், தனியார் சொத்துகளும் சேதமடைந்தன. இதுதொடர்பாக டெல்லி போலீசார் பதிவு செய்த வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் விசாரணைக்கு வழங்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டது.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சரிடம் தர்மேந்திர பிரதானிடம் ராஜினாமா கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரடைந்து வருகிறது.

    Advertisement

    கடந்த 20ம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி புறப்பட்டனர். அனுமதி பெறாததால் அப்போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களும் போலீசாரை தாக்கினர். இதில் இருதரப்பிலும் பலநூறு பேர் காயமடைந்தனர்.
    இருப்பினும் தற்போதும் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தான் அகில பாரத் ஹிந்து மகாசபா அமைப்பினர் முன்னாள் துணை தலைவர் சதீஷ் குமார் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ''கடந்த 20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டவர். இவர்கள் தேசத்துக்கு எதிரானவர்கள்.

    Advertisement

    உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலிக்கு வெளிநாட்டு தொடர்பு உள்ளது. மேலும் அன்றைய பேரணியில் போலீசார், பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர். பொது சொத்துகளும், தனியார் சொத்துகளும் சேதமடைந்தன. இதனால் அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    அதோடு மனுதாரர் சார்பில் நேற்று வழக்கறிஞர் பருண் சின்ஹா ஆஜரானார். அப்போது, ''மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில் டெல்லியில் நடக்கும் சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த டெல்லியும் முடங்கி உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

    Advertisement

    இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது என்ஐஏ விசாரணைக்கு உயர்நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. அதனை மத்திய அரசு தான் செய்ய முடியும் என்று கூறியது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்று கொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மனுவை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி தள்ளுபடி செய்தது.

    English Summary

    Those who marched towards Parliament were acting against the nation. Public and private properties were damaged during the rally held that day. Today, the Delhi High Court summarily dismissed a petition filed by Hindu organizations seeking to hand over the cases registered by the Delhi Police regarding this incident to the National Investigation Agency (NIA) for investigation.